சிலம்புச்சாலை
சிலம்புச்சாலை, சுப்ர. பாலன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி, அது தொடர்பான இடங்களுக்கு நேரில் சென்று அனுபவ பூர்வமாக எழுதப்ட்ட ஒரு இலக்கியப் பயண நூலாகும். கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள குமுளி வனப்பகுதியில் பாழடைந்து கிடக்கும் கண்ணகி கோட்டத்தை தரிசித்து வரவேண்டும் என்ற ஆசையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது. இது சிறந்த நூல். சிலப்பதிகாரத்தைப் படித்த உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.
—-
குறள் கூறும் ஊழும் கூழும், கி. ராமசாமி, வஞ்சி மலர், மதுரை, விலை 150ரூ.
குறள் கூறும் ஊழும் கூழும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழறிஞர்கள் நிகழ்த்திய உரையின் தொகுப்பே இந்நூல். வள்ளுவரின் பகுப்பு முறைகள் மற்றும் திருக்குறளின் அருமை பெருமைகள் குறித்து நிறைய விவரங்கள் இதில் தொகுத்து தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.