எனது பயணம்
எனது பயணம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா பிரீத் காம்ப்ளெக்ஸ், 42, மாள்வியா நகர், போபால் 462003. விலை 150ரூ.
இது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கைக் குறிப்பு அல்ல. சவால்கள் நிறைந்த அவரது நெடிய பயணத்தின் ஒரு திருப்பத்தில் இருந்து, அவர் கடந்துவந்த நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்து அசைபோடும் அற்புத உணர்ச்சிக் குவியல்கள். இதனை அவர் உள்ளது உள்ளபடி, சுவையாக கூறி இருக்கும் பாங்க வியக்க வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏற்படுத்திய தாக்கம், தாய், தந்தை உள்பட பலரது தொடர்பு மூலம் தான் பெற்ற படிப்பினை ஆகியவற்றை அவர் வெளிப்படுத்தி இருப்பது, வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்து உள்ளது. அப்துல்கலாமே நமது எதிரில் இருந்து பேசுவது போன்ற சரளமான மொழிபெயர்ப்பை வழங்கிய நாகலட்சுமி சண்முகம் (டி.கே.எஸ். சகோதர்களில் மூத்தவரான டி.முத்துசாமியின் பேத்தி) பாராட்டுக்கு உரியவர்.
—-
சுவீகாரம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-868-9.html தத்தெடுத்தல் தொடர்பாக நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் விடை கூறும் முழுமையான ஓர் ஆய்வு நூல். தத்தெடுத்தல் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்… அந்தக் குழந்தை உண்மையாக நம்மை நேசிக்குமா… அதேபோல் அந்தக் குழந்தையை நேசிக்க முடியுமா… என்பது போன்ற கேள்விகளும் பயங்களும் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்தால் நிச்சயம் அவற்றை உதறிவிடுவார்கள். ஒரு குழந்தை மீது அன்பு செலுத்தும் மனமும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான வசதியும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம். குழந்தையில்லாத தம்பதிக்கு குந்தை என்பது மறைந்து போய் அநாதைக் குழந்தையின் நலன் என்ற கோணத்தில் தத்தெடுத்தல் பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நூலாசிரியர் வினதா பார்கவா. தமிழகத்தில் இருக்கும் தத்து நிறுவனங்களது விலாசம், தொலைபேசி கொடுத்திருப்பது திசை தெரியாமல் தவிப்போருக்கு உதவும். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் ரம்யா மாதவன். நன்றி: தினத்தந்தி, 18/12/13. எனது பயணம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா பிரீத் காம்ப்ளெக்ஸ், 42, மாள்வியா நகர், போபால் 462003. விலை 150ரூ. இது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கைக் குறிப்பு அல்ல. சவால்கள் நிறைந்த அவரது நெடிய பயணத்தின் ஒரு திருப்பத்தில் இருந்து, அவர் கடந்துவந்த நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்து அசைபோடும் அற்புத உணர்ச்சிக் குவியல்கள். இதனை அவர் உள்ளது உள்ளபடி, சுவையாக கூறி இருக்கும் பாங்க வியக்க வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏற்படுத்திய தாக்கம், தாய், தந்தை உள்பட பலரது தொடர்பு மூலம் தான் பெற்ற படிப்பினை ஆகியவற்றை அவர் வெளிப்படுத்தி இருப்பது, வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்து உள்ளது. அப்துல்கலாமே நமது எதிரில் இருந்து பேசுவது போன்ற சரளமான மொழிபெயர்ப்பை வழங்கிய நாகலட்சுமி சண்முகம் (டி.கே.எஸ். சகோதர்களில் மூத்தவரான டி.முத்துசாமியின் பேத்தி) பாராட்டுக்கு உரியவர். சுவீகாரம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. தத்தெடுத்தல் தொடர்பாக நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் விடை கூறும் முழுமையான ஓர் ஆய்வு நூல். தத்தெடுத்தல் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்… அந்தக் குழந்தை உண்மையாக நம்மை நேசிக்குமா… அதேபோல் அந்தக் குழந்தையை நேசிக்க முடியுமா… என்பது போன்ற கேள்விகளும் பயங்களும் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்தால் நிச்சயம் அவற்றை உதறிவிடுவார்கள். ஒரு குழந்தை மீது அன்பு செலுத்தும் மனமும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான வசதியும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம். குழந்தையில்லாத தம்பதிக்கு குந்தை என்பது மறைந்து போய் அநாதைக் குழந்தையின் நலன் என்ற கோணத்தில் தத்தெடுத்தல் பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நூலாசிரியர் வினிமா பார்கவா. தமிழகத்தில் இருக்கும் தத்து நிறுவனங்களது விலாசம், தொலைபேசி கொடுத்திருப்பது திசை தெரியாமல் தவிப்போருக்கு உதவும். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் ரம்யா மாதவன். நன்றி: தினத்தந்தி, 18/12/13.