வாரம் ஒரு பாசுரம்
வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html
வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது நாலாயிரத்திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளில் மிகச் சிறந்தது, பெரியவாச்சான் பிள்ளையின் உரை என்பர் பெரியோர். அவ்வுரையை இன்றைய இளைஞர்கள் பலரால் படித்துப் பொருள் உணர்வது கடினம். காரணம் அவ்வுரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. பழகு தமிழில், சுஜாதா இந்நூலை 68 பாசுரங்களுக்கு மிக எளிமையாக உரை எழுதியுள்ளார். படிப்பதற்கு சுவையாக உள்ளது. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 18/12/13.
—-
தமிழ் வழிபாடும் சிறு தெய்வங்களும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், அவ்வைக் கோட்டம், திருவையாறு, தஞ்சாவூர்மாவட்டம், விலை ரூ.500.
திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் 11வது அனைத்துலகத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்குக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா, கோபுர தரிசனம் கோடி புண்ணியம், மக்கள் வாழ்வின் கலங்கரை விளக்கம் திருக்கோவில்கள் இத்தகைய சிறப்புமிக்க திருக்கோவில்களில் தெய்வத்தமிழ் வீற்றிருக்கும் மாண்புகளையும், மாட்சியினையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் கட்டுரைகள் அமையப்பெற்றுள்ளன. இவை தெய்வ வழிபாட்டுக் குழுக்களின் ஒற்றுமையையும், மக்களின் பண்பாட்டையும், இறை நம்பிக்கையையும் காட்டுவனவாய் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/12/13.