உரையாசிரியர்களின் உரைவளம்

உரையாசிரியர்களின் உரைவளம், கண்ணகி கலைவேந்தன், தமிழய்யா வெளியீட்டகம், பக். 480, விலை 500ரூ. கரந்தை தமிழ்ச்சங்கமும், திருவையாறு கல்விக்கழகமும் நடத்திய அனைத்துலக உரைநடைத்தமிழ் 14ஆவது ஆய்வு மாநாட்டின் கட்டுரைத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் 80 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இலக்கணம், இலக்கியம், தற்கால உரைநடை முன்னோடிகள் என 3 பிரிவுகளாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி என்பது மக்களின் தொடர்பியல் சாதனமாக உள்ள நிலையில், காலத்திற்கேற்ப மக்கள் அம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழிகளின் கால தூதுவர்களாகவும், இணைப்புப் பாலமாகவும் திகழ்பவர்களே உரையாசிரியர்கள் என்பது பொதுவான கருத்து. […]

Read more

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள்

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சை, விலை 500ரூ. தமிழில் புகழ் பெற்று விளங்கும் நாவல்கள் பற்றி, ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கல்கியின் சிவகாமியின் சபதம், டாக்டர் மு. வரதராசனாரின் அகல் விளக்கு, அகிலனின் நெஞ்சின் அலைகள், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், தி. ஜானகிராமனின் மோகமுள் உள்பட 89 நாவல்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சிவகாமியின் சபதம் நாவலை 4 பேர்கள் 4 கோணங்களில் ஆராய்ந்துள்ளனர். […]

Read more

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும்

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 500ரூ. திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் அனைத்துல 11வது ஆய்வு மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், பல்துறை பேராசிரியர்கள், புலவர்கள், சமய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் வாசித்து அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். திருக்கோவில்களில் வளர்ந்த தெய்வத்தமிழ், தெய்வத்தமிழ் இலக்கியங்கள், திருக்கோவில்கள் வளர்த்த மரபுக் கலைகள், திருக்கோவில்களின் கலையும் மாட்சியும் ஆகிய தலைப்புகளின் கீழ் 91 கட்டுரைகள் கருத்துக் கருவூலமாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —-   […]

Read more

நாடறிந்தோர் வாழ்வில்

நாடறிந்தோர் வாழ்வில், சீதைப் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைக் கூறும் நூல். இதற்கு முன் இதுபோன்ற நூல்கள் வந்திருக்கின்றன. அவை உரைநடையில் எழுதப்பட்டவை. கவிவேந்தர் கா. வேழவேந்தன் இந்த நூலை மரபுக் கவிதை வடிவில் எழுதியுள்ளார். எல்லோரும் எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கும்படியாகவும், அதே சமயத்தில் இலக்கியச் சிறப்புடனும் கவிதைகளை எழுதியிருப்பது கவிஞரின் ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றன. மகாத்மா காந்தி, நேரு, சாக்ரடீஸ், பெரியார், அண்ணா, பாரதியார், கலைஞர் கருணாநிதி, பாரதிதாசன், கண்ணதாசன் உள்பட 50 தலைவர்கள், சாதனையாளர்கள் […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது நாலாயிரத்திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளில் மிகச் சிறந்தது, பெரியவாச்சான் பிள்ளையின் உரை என்பர் பெரியோர். அவ்வுரையை இன்றைய இளைஞர்கள் பலரால் படித்துப் பொருள் உணர்வது கடினம். காரணம் அவ்வுரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. பழகு தமிழில், சுஜாதா இந்நூலை 68 பாசுரங்களுக்கு மிக எளிமையாக […]

Read more