வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள்
வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சை, விலை 500ரூ.
தமிழில் புகழ் பெற்று விளங்கும் நாவல்கள் பற்றி, ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கல்கியின் சிவகாமியின் சபதம், டாக்டர் மு. வரதராசனாரின் அகல் விளக்கு, அகிலனின் நெஞ்சின் அலைகள், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், தி. ஜானகிராமனின் மோகமுள் உள்பட 89 நாவல்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சிவகாமியின் சபதம் நாவலை 4 பேர்கள் 4 கோணங்களில் ஆராய்ந்துள்ளனர். இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகவும் பயனளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.
—-
வர்மமோகினி, ஸ்ரீகாளீஸ்வரி பப்ளிகேஷன்ஸ், கோவை, விலை 90ரூ.
பாண்டிய நாட்டு வர்மகுரு வான்முகிலனின் வீர சாகசங்களை கற்பனை சக்தியுடன் விறுவிறுப்புடன் குறுநாவலாக படைத்து உள்ளார் ஆசிரியர் டிராகன் டி.ஜெய்ராஜ். வீரம், காதல், மர்மம் இந்த மூன்றும் கலந்த கலவையாக நாவலாக அலங்கரிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.