சினிமாவின் மறுபக்கம்

சினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நாட்டுக்காக புரட்சிகள் செய்த […]

Read more

ஒரு யாகம் ஒரு தியாகம்

ஒரு யாகம் ஒரு தியாகம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், விலை 90ரூ. சினிமா உலகில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய ஒரு யாகம் ஒரு தியாகம், பரிகாரம், வாத்தியாரய்யா ஆகிய 3 குறுநாவல்கள் அடங்கிய நூல். ஒரு யாகம் ஒரு தியாகம் என்ற கதையில் அமைச்சர் ஆளவந்தாரை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அந்தச் சம்பவங்களை அவருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பரிகாரம், வாத்தியாரய்யா […]

Read more

காவ்யா ஒரு காவியம்

காவ்யா ஒரு காவியம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ், இப்போது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்து வருகிறார். அவர் எழுதிய காவ்யா ஒரு காவியம், இலட்சியப் பயணம், இதய இலக்கணம், அரண்மனை வாரிசு ஆகிய 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. பாசமலர் போன்ற காவியங்களை படைத்தவர் அல்லவா? இந்த குறுநாவல்களிலும் அவரது முத்திரையைப் பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மருத்துவ நோபல், நெல்லை சு. […]

Read more

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை, ஆரூர்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 1, பக். 448, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-796-8.html கதை வசனகர்த்தாவாக திரையுலகில் புகழ் பெற்ற ஆரூர்தாஸ் தனது வாழ்க்கை அனுபவங்களை சுவைபட விவரிக்கும் நூல் இது. அவரின் வாழ்க்கை வரலாற்றோடு அந்தக் கால கலையுலகின் வரலாறும் இதில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பராசக்தி படத்தில் அறிமுகமானபோது, சிவாஜியை குதிரை மூஞ்சி என்று சொல்லி படத்திலிருந்தே தூக்கிவிடச் சொன்ன ஏ.வி. மெய்ப்ப […]

Read more

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை 14, பக். 296, விலை 150ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more

கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள், மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா வெளியீடு, சென்னை – 17, பக்கம் 192, விலை 90 ரூ. அன்பையும் அறத்தையும் அடிநாதமாகக் கொண்டது கன்ஃபூசியனிஸம். இதை சீனாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் கன்ஃபூசியஸ். உண்மை, இரக்கம், ஒருமுகப்படுத்துவது, சகோதரத்துவம், தாய்மையைப் போற்றுதல், கல்வி, ஒழுக்கம் போன்ற பலவற்றைக் குறித்த கன்ஃபூசியஸின் தத்துவங்களை விளக்கும் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் சென்றடையும் வகையில், கசப்பு மருந்துக்கு இனிப்புப் பூச்சுடன் தத்துவங்களை அளிக்கும் இந்த […]

Read more