சினிமாவின் மறுபக்கம்
சினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ.
ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
-மணிகண்டன்.
நன்றி: குமுதம், 29/6/2016.
—-
உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ.
நாட்டுக்காக புரட்சிகள் செய்த லெனின், ஸ்டாலின், மாஜினி, காரல்மார்க்ஸ் உள்பட 17 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய நூல்.
நன்றி: தினத்தந்தி. 22/6/2016