கௌதம நீலம்பரன் நாடகங்கள்
கௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ.
மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை.
-மணிகண்டன்.
நன்றி: குமுதம், 29/6/2016.
—-
யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ.
சித்தர்களும், யோகிகளும் கடைப்பிடித்த யோகங்களில் ஒன்று சரயோகம். அது பற்றிய விவரங்களை விளக்குகிறார், யோகி சிவானந்த பரமஹம்சா. பல்வேறு யோகாசனங்கள் செய்யும் முறைகள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி. 22/6/2016