திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி
திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ.
மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
-மணிகண்டன்.
நன்றி: குமுதம், 29/6/2016.
—-
லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ.
அரசியல் அலுவல்கள், பொதுநல அக்கறைகள் ஆகியவற்றின் காரணமாக பொது வாழ்க்கையில் வாழும் ஆண்களுடன் இணைந்து வாழும் பெண்களின் அனுபவங்களை பிரதிபலிக்கும் நூலாகும்.
நன்றி: தினத்தந்தி. 22/6/2016