திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]

Read more

லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]

Read more