லட்சுமி என்னும் பயணி
லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ.
சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தெள்ளத்தெளிவாக விளக்கியிருப்பதில், நூலின் சிறப்பு வெளிப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 20/1/2016.
—-
காலம் தோறும் நூலகம், பா. பாலசுப்பிரமணியன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ.
நூல்களையும், நூலகத்தை பற்றியும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் சங்க காலம், சமய காலம் இஸ்லாமிய காலம், ஆங்கிலேயர் காலகட்டங்களை உள்ளடக்கி எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.