ஹைக்கூ புதிது

ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு),  நெல்லை சு.முத்து, பக்.240, விலை ரூ.220. ன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. ஹைக்கூ பற்றித் தெரிந்து கொள்ள பயன்படும் நூல். நூலாசிரியர் புகழ்பெற்ற அறிவியலாளர். ஹைக்கூ பற்றிய நூலிலும் அவருடைய அறிவியல்சார்ந்த அணுகுமுறை வெளிப்படுகிறது. விவரங்களைப் பரிசீலனை செய்து முடிவுக்கு வருதல் அறிவியல் அணுகுமுறை. ஹைக்கூ பற்றிய இந்நூலிலும் ஹைக்கூ சார்ந்த பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன. சுமார் 274 ஹைக்கூ கவிஞர்கள் உள்ளனர்; 26 ஹைக்கூ இதழ்கள் உள்ளன; ஹைக்கூ எழுதுபவர்களைக் […]

Read more

அற்புத மனிதர் அப்துல்கலாம்

அற்புத மனிதர் அப்துல்கலாம், நெல்லை சு.முத்து, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. அப்துல் கலாம் தம்மை நாட்டுக்கே தந்து வான் புகழ் கொண்ட சிற்றுார், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் எனும் கடலோரக் கிராமம். சிவாலயமும், வைணவக் கோவிலும், முகம்மதியப் பள்ளிகளும் அருகருகே இருந்தன. போட்டி பொறாமையின்றி அமைதியுடன் வாழ்ந்து வந்த தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம் அந்தத் தீவு. ஆபுல் – காபுல் ஒலியுல்லா தர்க்கா என்னும் தொழுகை இடம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அவர்கள் ஆதாமின் மக்கள் என்று திருமறை உரைக்கிறது. […]

Read more

பாரதி காவியம்

பாரதி காவியம், நெல்லை சு. முத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 300ரூ. மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த “பாரதி காவியம்” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதை எழுதிய நெல்லை சு.முத்து, இந்திய விண்வெளித்துறை முதல் நிலை விஞ்ஞானி என்றாலும், இலக்கியத்தில் மூழ்கித் திளைப்பவர். தமிழில் 140 நூல்கள் எழுதியுள்ள சாதனையாளர். பாரதி வரலாற்றை அருமையான கவிதைகளில் வடித்துத் தந்துள்ளார். படிப்பவர்கள் “நிச்சயமாக இது ஒரு காவியம்தான்” என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அருமையும், […]

Read more

முத்துவைக் கேளுங்கள்

முத்துவைக் கேளுங்கள், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், பக்.152, விலை ரூ.150. நூலாசிரியர் கலந்து கொண்ட கூட்டங்களில் மாணவ, மாணவியர் எழுத்து மூலம் தொகுத்து அளித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், பல்வேறு நாளிதழ்களில், இதழ்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நூலாசிரியர் அளித்த பதில்கள், நூலாசிரியரின் நேர்காணல் அனைத்தும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. வானவியல் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமல்ல, அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் தொடர்பான பல கேள்விகளுக்கும், எளிமையாகவும், தெளிவாகவும் அறிவியலில் ஆர்வமற்றவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூலாசிரியர் பதில் அளித்துள்ளார். ‘ஏன் செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு […]

Read more

கலாம் அடிச்சுவட்டில்,

கலாம் அடிச்சுவட்டில், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், விலை 150ரூ. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன், நூலாசிரியர் சந்திப்புகள், கடிதத் தொடர்புகள், வாழ்க்கை பற்றிய புதுவிபரங்கள், சுய அனுபவம் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன் தரும் வகையில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —- விதவை என்பதால் வீழ்வேன் என்று நினைத்தாயோ?, வி. ஷீலாமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. தலைப்பிலேயே புரட்சிரமான கருத்து ஒலிக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள 21 சிறுகதைகளும் நல்ல கருத்துக்களை வலியுறுத்துகின்றன. […]

Read more

காவ்யா ஒரு காவியம்

காவ்யா ஒரு காவியம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ், இப்போது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்து வருகிறார். அவர் எழுதிய காவ்யா ஒரு காவியம், இலட்சியப் பயணம், இதய இலக்கணம், அரண்மனை வாரிசு ஆகிய 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. பாசமலர் போன்ற காவியங்களை படைத்தவர் அல்லவா? இந்த குறுநாவல்களிலும் அவரது முத்திரையைப் பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மருத்துவ நோபல், நெல்லை சு. […]

Read more

எங்கெங்கு காணினும் அறிவியல்

எங்கெங்கு காணினும் அறிவியல், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 128, விலை 60ரூ. நாற்பது அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல். புதுப்புது அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சுவாரசியமான தகவல்கள். ஜாவாத் துவில் கி.பி. 1891 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய இனத்தை அடையாளம் காட்டுகிறதாம். இதனை பித்திக்காந்த்ரோப்பஸ் எரக்டஸ் என்கின்றனர் மானிடவியலாளர். ஜாவா மனிதனும், பீப்கிங் மனிதனும் ஒரே மரபுடையவர்கள். இவ்வினத்தினை இன்றைய மங்கோலாய்டு என்று கூறலாம் என்ற தகவல்களை இந்திய […]

Read more

அறிவியல் போற்றுதம்

அறிவியல் போற்றுதம், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 268, விலை 100ரூ. தினமணி நாளிதழில் நூலாசிரியர் நெல்லை சு.முத்து எழுதி வெளியான அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் 27 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்ணில் செலுத்திய விண்கலன்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், வானிலை ஆய்வூர்திகள் என சகல விஷயங்களையும், அதற்கான காரண காரியங்களையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ஒருபுறம் சாதனைகளைப் பட்டியலிடும் நூலாசிரியர், மறுபுறம் அதனால் விளைந்த தீமைகளையும் விவரிக்கத் […]

Read more

விண்வெளி நாட்குறிப்புகள்

விண்வெளி நாட்குறிப்புகள், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 184, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-6.html வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை. அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில் விண்வெளி […]

Read more

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5, விண்வெளித் தொழில் நுட்பம் செயற்கைக்கோள்கள், நெல்லை சு. முத்து, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை 5, பக். 358, விலை 300ரூ. தமிழில் மிக அபூர்வமாகவே நல்ல தரமான நூல்கள் வெளியாகின்றன. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள இந்த நூல் அப்படிப்பட்டதாகும். விண்வெளியில் உள்ள நிலைமைகள், ராக்கெட் தோன்றிய வரலாறு, ராக்கெட் வடிவமைப்பு, எரிபொருட்கள், ராக்கெட் தளம், செயற்கைகோள்கள், விண்கலன்கள் என்று தொடங்கி எதிர்கால ராக்கெட் எஞ்சின்கள் வரை அனைத்தும் இந்நூலில் […]

Read more