விண்வெளி நாட்குறிப்புகள்
விண்வெளி நாட்குறிப்புகள், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 184, விலை 180ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-6.html வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை. அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில் விண்வெளி விமானத்துடன் கூடிய முதலாவது விண்வெளி ஓடம் கொலம்பியா 1981இல் ஏவப்பட்டுள்ளது. இதுபோல், விண்வெளி தொடர்பான ஏராளமான பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வந்துள்ளது விண்வெளி நாட்குறிப்புகள் புத்தகம். ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஓர் ஆண்டின் அனைத்து நாள்களிலும் விண்வெளி சாதனைகளை நாட்காட்டி வடிவில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நெல்லை சு.முத்து. இவர் இஸ்ரோவில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். எஸ்.எல்.வி. 3 ராக்கெட் மூலம் செயற்கைகோளை வெற்கிரமாக விண்ணில் ஏவிய தினம் (ஜுலை 18, 1979) முதன் முதலாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்ட தினம் (செப்டம்பர் 20,1993) சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்ட தினம் (அக்டோபர் 22, 2008), நிலவில் நீர் இருப்பதாக சந்திரயான் 1 கண்டறிந்த தினம் (செப்டம்பர் 24, 2009) போன்ற இந்திய விண்வெளித் துறையில் முக்கியமான நாள்கள் குறித்தும் ஏராளமான குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. விண்வெளி ஆர்வலர்களும், மாணவர்களும் இந்த புத்தகத்தை நிச்சயம் வாசிக்கலாம். நன்றி: தினமணி, 13/10/2014.
—-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை, பி.கே.பாலகிருஷ்ணன், தமிழாக்கம் எஸ். சோமு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-345-5.html 1920ம் ஆண்டு அக்டோபர் 17ந் தேதி முதல் இதுவரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் நடந்த மாநாட்டு தீர்மானங்கள், தலைவர்களின் கருத்துகள், நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் என அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/10/2014.