ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது
ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது, ஜவி பீட்டர், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 173, விலை 110ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-7.html கேரள மாநிலத்தில் வாழும் ஈழவ சமுதாய மக்களின் போராட்ட வரலாற்றைச் சொல்லும் நூல். 19ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் இருந்த சமுதாயப் பிரிவுகள், சாதிப் பிரிவுகள், ஒவ்வொரு சாதியினரின் சமூக அந்தஸ்துகள் ஆகியவற்றை நூல் விளக்குகிறது. சுதந்திரமாக நடமாடவும், கோயில்களில் நுழைந்து வழிபாடு செய்யவும், கல்வி கற்கவும், அரசுப் பணிகளில் நுழையவும் ஈழவ சமுதாய மக்களுக்குத் தடை இருந்தது. ஆண்கள் மட்டும் அல்ல. பெண்களும் கூட மேலாடை அணையக்கூடாது என்ற தடை இருந்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் கோயில் நுழைவுப் போராட்டம் உட்பட பல போராட்டங்களை நடத்தினர். பல்வேறு அரசியல் போராட்டங்களையும் நடத்தினர். ஈழவ சமுதாய மக்களில் இருந்து அரசியல் தலைவர்கள் தோன்றினர். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்றனர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த ஈழவ சமுதாய மக்கள் மோசமான நிலைமாறி இன்று அவர்களும் பிற சமுதாய மக்களைப் போலவே சிறந்து விளக்குகின்றனர். ஈழவ சமுதாய மக்களின் இந்த வரலாற்றை மிகச் சிறிப்பாக இந்நூல் எடுத்துரைக்கிறது. மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் மேம்பட்டால் போதும் என்ற நாராயண குருவின் பங்களிப்பின் முக்கியத்துவமும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. நன்றி: தினமணி, 13/10/2014.