உலகப்பன் காலமும் கவிதையும்

உலகப்பன் காலமும் கவிதையும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-7.html புதுவைக்குயில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்போர் மதுவை உண்ட வண்டுபோல மயங்குவர் என்பது திண்ணம். பாடாத பொருளில்லை எனச் சொல்லும் அளவுக்கு, அந்த எழுச்சிக் கவிஞர் எழுதிக் குவித்த, முதல் கவிதை தொடங்கி அத்தனைக் கவிதைகளையும் ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளார் நூலாசிரியர். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், பாரதிதாசனின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல் நிகழ்வுகள், எண்ணற்ற வரலாற்றுத் தகவல்களுடன் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இது பாரதிதாசனின் படைப்புகளை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. பாவேந்தரின் தோழரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வ. சுப்பையா, பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் ஆகியோரின் விரிவான பேட்டிகளும் இந்நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளன. பாரதிதாசன் படைப்புகள் குறித்து ஆய்வு நூல்கள் பல ஏற்கெனவே வந்திருந்தாலும், அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தனிச்சிறப்புடன் வந்திருக்கும் நூல் இது என்றால் மிகையில்லை. நன்றி: தினமணி, 13/10/2014.  

—-

வாழ்வை வளமாக்கும் தியானம், சிவசித்தன், சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-565-9.html அலைபாயும் மனதை ஒரு முகப்படுத்துவதற்காக தியானம் அவசியமாகிறது. நம் மனதையும், உடலையும் பக்குவப்பட்ட நிலையை அடையவைப்பதற்கு தியானம் உதவுகிறது. இந்த தியானத்தை எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *