அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள், குவின்டின் ஹோரே, ஜியடோஃபெரி நோவல் ஸ்மித், தமிழில் வான்முகிலன், அலைகள் வெளியீட்டகம், சென்னை, பக். 802, விலை 600ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-8.html அந்தோனியோ கிராம்சி இத்தாலியைச் சேர்ந்தவர். 1891இல் பிறந்தவர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர். அதன் காரணமாக, இரண்டாம் உலகப் போர் காலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முசோலினியால் சிறை வைக்கப்பட்டவர். பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர். எனினும் அவர் சிறையில் இருந்த காலத்தில் தனது சிந்தனைகளைக் கிறுக்கல்களாகவும், சங்கேதக் குறியீடுகளாகவும் எழுதி வைத்தார். சிறையிலேயே இறந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு அவர் எழுதிய குறிப்புகளை வெளிக் கொண்டு வந்து நூலாக்கியுள்ளனர். அதன் தமிழ் வடிவம்தான் இந்த நூல். கம்யூனிச இயக்கத்தின் அடிப்படையாகிய மார்க்சிய தத்துவத்தின் கண்ணோட்டத்தில் லெனின், மாசேதுங் போன்றவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சமூகத்தை விளக்கினர். அந்த விளக்கங்களின் அடிப்படையில் மார்க்சியத்துக்கு புதிய வளர்ச்சியையும் ஏற்படுத்தினர். அந்தோனியா கிராம்சியும் அவர் காலத்திய அரசுகளின் தன்மைகள், அறிவு ஜீவிகளின் போக்குகள், உற்பத்தி முறைகள், அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள், தத்துவம், அமெரிக்க முதலாளிகள், தொழிலாளிகளின் குறிப்பான தன்மைகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார். அந்தோனியோ கிராம்சியின் சிந்தனைகள் மார்க்சியத்தை வளர்க்கிறதா? அல்லது மார்க்சியத்துக்குப் புறம்பானதா? என்பதில் நமது நாட்டிலும் மட்டுமல்ல, உலகெங்கிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. என்றபோதிலும் அவருடைய சிந்தனைகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் சிறிதளவேனும் உதவக்கூடும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 13/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *