முத்துவைக் கேளுங்கள்
முத்துவைக் கேளுங்கள், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், பக்.152, விலை ரூ.150.
நூலாசிரியர் கலந்து கொண்ட கூட்டங்களில் மாணவ, மாணவியர் எழுத்து மூலம்
தொகுத்து அளித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், பல்வேறு நாளிதழ்களில், இதழ்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நூலாசிரியர் அளித்த பதில்கள், நூலாசிரியரின் நேர்காணல் அனைத்தும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
வானவியல் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமல்ல, அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் தொடர்பான பல கேள்விகளுக்கும், எளிமையாகவும், தெளிவாகவும் அறிவியலில் ஆர்வமற்றவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூலாசிரியர் பதில் அளித்துள்ளார்.
‘ஏன் செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்படுகின்றன? செயற்கையாகவும் மழை பெய்ய வைக்க முடியுமா? உயிரினங்கள் எப்படி உருவாயின? மனிதனுக்கு மட்டும் எப்படி ஆறறிவு வந்தது? அதற்கான காரணம் என்ன? வியர்வைச் சுரப்பி என்றால் என்ன? தண்ணீருக்கு ஏன் நிறமில்லை? ஓசோன் ஓட்டை ஆகாமல் தடுக்க என்ன வழி? யூக்கலிப்டஸ் மரங்கள் உண்மையில் கழிவுநீரை உறிஞ்சி, நல்ல நீரை ஆவியாக வெளிவிடுவதாகக் கூறுகிறார்கள். தாவரங்களுக்கு எப்படித் தெரியும் அது கழிவுநீர் என்று? 39’ என இந்நூலில் உள்ள கேள்விகள், அதற்குரிய பதில்கள், தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
‘தமிழ் இலக்கியங்களிலும் விமானம் பேசப்படுகிறதா? 39’ என்ற இலக்கியம் பற்றிய
கேள்விக்கு நூலாசிரியர் பதில் அளித்துள்ளது, ‘சீனாவின் வளர்ச்சி அதன் உற்பத்திப்
பொருளாதாரம் சார்ந்தது. ஆனால், இந்தியாவின் முன்னேற்றமோ சேவைப்
பொருளாதாரத்தின் அடிப்படையில் ஆனது 39’ என இரண்டே வரிகளில் இரண்டு
நாடுகளின் பொருளாதாரத்தை நூலாசிரியர் மதிப்பிடுவது ஆகியவை அவரின் ஆழ்ந்த பல்துறை அறிவுக்குச் சான்றுகளாகும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பயன்படும் நூல்.
நன்றி: தினமணி, 30/4/2017.