பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, விலை 320ரூ.

சிரியாவில் பிறந்து வளர்ந்த சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச்சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஈரமுடைய எவர் மனசுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது.

சொந்தநாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் சிரியாவிற்கு போய்அங்கே நடப்பவற்றை பதிவிடுவது சாதாரண விஷயமல்ல. முன்பு போல் சிரியா சொர்க்க பூமி இல்லை. ரணகளமும், மரண வெறி கொண்ட தீவிரவாதக் குழுக்களுக்கும், காட்டுமிராண்டித்தனமான அரசுக்கும் இடையில் சிக்கிச் சீரழியும் நாடு, மிகவும் உயிர்ப்பான புத்தகம்.

மரண பீதியோடு ஒரு பயணமும், அதுவும் நிச்சயமற்ற பயணமும் மேற்கொள்வது யாவருக்கும் சாத்தியமானதல்ல. இறுக்கமும், உண்மையும், அதிபயங்கரமும், போர் அரக்கனின் கொடுமையும் காண நேர்வதும், அதை அக்கறையோடு தயவு தாட்சண்யமின்றி பதிவிடுவதும் பிரமிக்க வைக்கிறது. எதையும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் உலகிற்கு ஆகச் சிறந்த சவால் இந்தப் பயணம். மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜ் வணக்கத்திற்குரியவர். ஆன்மாவை உள்ளிழுத்து மொழி மாற்றம் செய்திருக்கிறார்.

தமிழில் இது மாதிரியான நிஜப்பயணம் காணக்கிடைக்கச் செய்த எதிர் வெளியீட்டுக்கு வந்தனம்.

நன்றி: குங்குமம், 21/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *