காவ்யா ஒரு காவியம்
காவ்யா ஒரு காவியம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ், இப்போது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்து வருகிறார். அவர் எழுதிய காவ்யா ஒரு காவியம், இலட்சியப் பயணம், இதய இலக்கணம், அரண்மனை வாரிசு ஆகிய 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. பாசமலர் போன்ற காவியங்களை படைத்தவர் அல்லவா? இந்த குறுநாவல்களிலும் அவரது முத்திரையைப் பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.
—-
மருத்துவ நோபல், நெல்லை சு. முத்து, வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
உலக வரலாற்றில் உடலியங்கியல் மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவின் கீழ் நோபல் பரிசு பெற்ற முதல் நூறு விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பு நூல். இது மாணவர்களுக்கும், மருத்துவ ஆர்வலர்களுக்கும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.