ஒரு யாகம் ஒரு தியாகம்
ஒரு யாகம் ஒரு தியாகம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், விலை 90ரூ.
சினிமா உலகில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய ஒரு யாகம் ஒரு தியாகம், பரிகாரம், வாத்தியாரய்யா ஆகிய 3 குறுநாவல்கள் அடங்கிய நூல். ஒரு யாகம் ஒரு தியாகம் என்ற கதையில் அமைச்சர் ஆளவந்தாரை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அந்தச் சம்பவங்களை அவருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பரிகாரம், வாத்தியாரய்யா போன்ற கதைகளிலும் முத்திரை பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.
—-
வாழ்க்கையை வரலாறு ஆக்கியோன், தக்கலை ப. நடராசன், கன்னித்தமிழ் வெளியீடு, விலை 80ரூ.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல நாடகக் கலைஞரும், பொதுத்தொண்டரும், தமிழ்த்தொண்டருமான ஆர்.எம்.மஞ்சுவைப் பற்றி 40 பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.