புதுச்சேரி கோயில்கள்
புதுச்சேரி கோயில்கள், சங்கர் பதிப்பகம், விலை முதல்பாகம் 550ரூ, இரண்டாம் பாகம் 400ரூ.
புதுச்சேரி, இந்திய பிரெஞ்சு கலாச்சாரத்தின் வியத்தகு வரலாற்றுப் பெட்டகம். சித்தர்கள், கவிஞர்கள், தேசாபிமானிகள் நிறைந்த ஊர். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் இங்கு கோயில் இல்லாத ஒரு தெருவைக்கூட காண முடியாது. அத்தகைய கோயில்களின் தலவரலாறு, தலபுராணச் செய்தி, ஆலயத்தின் தனிச் சிறப்புகள், திருவிழாக்கள், கோவில்களுக்குரிய பாடல்களை டாக்டர் சி.எஸ். முருகேசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் விநாயகர் கோயில்கள், முருகன் கோயில்கள், சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், காளி கோயில்கள் எனப் பிரித்து இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார். இவை பக்தர்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.
—-
குட்டி பாப்பாவின் சேமிப்பு, வெண்ணிலா, ஏ.கே.எஸ். புக்ஸ்வேர்ல்டு, விலை 80ரூ.
குழந்தைகளை பெற்றோர்கள் படிக்க வைப்பதுடன், பெற்றோரும் படித்து, குழந்தைகளை அதன்படி வளர்ப்பதற்காக உயர்ந்த சிந்தனையுடன் படங்களுடன் கருத்துச் செறிவுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.