சொல்லில் அடங்காத உலகம்
சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ.
கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் பராக்கா. அந்தப் படத்தின் காட்சிகள் வழியாகத் தான் அடைந்த அனுபவத்தை வார்த்தைகளில் கடத்துவதற்கு நூலாசிரியர் செய்திருக்கும் முயற்சியே இந்த நூல். பக்கத்துக்குப் பக்கம் விதவிதமான உணர்ச்சிகள், அறைகூவல்கள், போராட்டங்கள், பொழுதுபோக்குகள், விழிப்புணர்வுகள், பழிவாங்கல்கள், மனித நேயத்தின் அவசியம் இப்படிப் பல அம்சங்களும் இந்நூலில் உள்ளன. புத்தகத்தை முழுவைதுமாக வாசித்து முடிக்கும்போது, பங்கேற்பாளராக இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகச் சாளரத்தின் மூலமாக உலகின் பார்வையாளராக நாம் ஆகிவிட்ட உணர்வு ஏற்படும். -ரவிக்குமார். நன்றி: தி இந்து, 28/11/2015.
—-
மனதை மலர வைக்கும் மஹாஸ்வாமிகள், அருள்மிகுஅம்மன் பதிப்பகம், விலை 130ரூ.
மனதிலுள்ள மாசுக்களை களைந்து ஆனந்தமாய் வாழ்வதற்கான, மனதை மலர வைப்பதற்கான வழிமுறைகளை காஞ்சி பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளியதை தொகுத்து அளித்துள்ளார் அம்மன் சத்தியநாதன். எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதை இந்நூல் வலியுறுத்துவதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த வழிகாட்டி நூலாகத் திகழும். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.