திடீர் இடியோசை
திடீர் இடியோசை, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 260ரூ.
இன்றைய சமுதாயம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிமுறைகளைச் சொன்னவர். நமது விரைவு வாழ்க்கையை நெறிப்படுத்த தியான முறையைத் தந்தவர் ஓஷோ. முப்பது ஆண்டுகளாக அவர் ஆற்றிய சொற்பொழிவு, எண்ணற்ற புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் இந்த திடீர் இடியோசையும் ஒன்று. இதை சுவாமி சியாமானந்த் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எதற்காகவும் உன் வாழ்க்கையை தியாகம் செய்யாதே. வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய். வாழ்க்கைதான் இறுதி இலக்கு. அது எந்த நாட்டை விடவும் எந்த மதத்தை விடவும் மிகப்பெரியது. கருணை என்பது காதலின் தூய்மையான வடிவம், காமம் என்பது காதலின் மிகவும் தாழ்ந்த வடிவம் என்பன போன்ற கருத்துகள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 25/11/2015.
—-
21-ம் நூற்றாண்டில் வாஸ்து, கற்பகம் புத்தகாலயம், விலை 220ரூ.
வாஸ்து அடிப்படையில் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக பரவி வருகிறது.அதைக் கருத்தில் கொண்டு வாஸ்து சாஸ்திரம் பற்றிய இந்த நூலை பொறியியல் துறையில் 40 ஆண்டுக் காலம் அனுபவம் பெற்ற பா.ரத்தினவேல் எழுதியுள்ளார். வீட்டை எப்படிக் கட்ட வேண்டும்? வீட்டைச் சுற்றிலும் திறந்தவெளி தேவை போன்ற கருத்துக்களையும், வாஸ்து சாஸ்திரம் தொடர்பான சோதிடக் குறிப்புகளையும், வாஸ்து தோசங்கள்-சோதனைப் பட்டியல்களையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார். வாஸ்து நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் அளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.