மங்களநாயகி ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி

மங்களநாயகி ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி; ஆசிரியர் : ஸ்ரீதரன் மணி, வெளியீடு: கிரி டிரேடிங் ஏஜன்சி , விலை 150/-

தாயின் அம்சங்களாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, ஆண்டாள், சத்தியபாமா, வேதவதி, பத்மாவதி பெருமை கூறும் நுால். மஹிஷாசுரனை அழிக்க, ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி அவதாரம் எடுப்பதும், போரில் தேவி மஹிஷாஸுரமர்தினி என்ற பெயர் பெறுவதும் விளக்கப்பட்டு உள்ளது.

திருப்பாவைப் பாசுரங்களை விளக்கி, அதன் மூலம், ஸ்ரீதேவியின் புகழ் விவரிக்கப்பட்டுள்ளது. நரகாசுரன் வதம் வரலாறு விளக்கப்பட்டுள்ளது; தீபாவளி கொண்டாடுவதின் நோக்கமும் அருமையாக கூறப்பட்டு உள்ளது. இறுதிப் பகுதியில், ஸ்ரீநிவாஸர், தேவி பத்மாவதியைத் திருமணம் செய்ய, குபேரனிடம் பட்ட கடன் பத்திரம் குறித்து விளக்கியுள்ளார். சில இடங்களில் திருக்குறள் மேற்கோள் பெருமை சேர்க்கிறது.

– டாக்டர் கலியன் சம்பத்து.

நன்றி: தினமலர்.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.