பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ
பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, ஆசிரியர் : டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், வெளியீடு: டெஸ்லா பதிப்பகம், விலை 175/-
பேரிடர் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும், ஹாம் ரோடியோ தொழில்நுட்பம், அதை பயன்படுத்தும் விதம் பற்றிய தகவலை உள்ளடக்கிய நுால். எளிமையான, 13 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களின் போது, தொலைபேசி சேவைகள் செயலிழக்க வாய்ப்பு உண்டு. அது போன்ற நேரங்களில், அமெச்சூர் வானொலி என்ற, ‘ஹாம்’ சேவை முக்கிய பங்காற்றும். மீட்பு நடவடிக்கைகளில் உதவும். அந்த சேவையை பற்றி விளக்குகிறது இந்த நுால்.ஹாம் ரோடியோவை நிறுவுவது, பயன்படுத்தும் வழிமுறை, உரிமம் பெறும் நடைமுறை, அது சார்ந்த தேர்வு என, விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும், பேரிடர் காலங்களில், ஹாம் ரோடியோவின் சேவை பெரும் உதவி புரிந்த வரலாறுகள் பல உள்ளது. பேரிடர் கால சேவை செய்வோருக்கு உதவும்.
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818