நாடகமும் தமிழிசையும்

நாடகமும் தமிழிசையும் , டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 176; விலை ரூ. 150; தமிழ் இசையை பாமர மக்களிடமும் பரப்பிய பெருமை தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு உண்டு, நாடகமும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டும் ஆய்வு நூல். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழிசைப் பாடல்கள், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார், நாடகம் வளர்த்த தமிழிசை, நாடகம் வளர்த்த நால்வர், நூற்றாண்டு கண்ட நடிப்பிசை மாமணிகள், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, சுதந்திரப் போராட்டத்தில் தமிழிசையின் பங்கு,  […]

Read more

தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்

தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம், முனைவர் சுந்தர சண்முகனார், மணிவாசகர் பதிப்பகம்,  பக்.800; விலை ரூ.650;  மணிவாசகர் பதிப்பகத்தின் வைரவிழா வெளியீடாக இந்நூல் வெளிவந்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு புறம் இது மகிழ்ச்சியான செய்தி என்றால், இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. அதற்குக் கீழ்க்காணும் பதிவு துணைசெய்யும். பழைய புத்தகக் கடையில் கண்டெடுத்த அற்புதமான புத்தகங்களில் ஒன்று தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம். தமிழ் இலக்கியம் படிக்கும், இலக்கியத்தில் லயிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய, அவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் அகராதித் […]

Read more

இதழியல் நுணுக்கங்கள்

இதழியல் நுணுக்கங்கள், எஸ்.ஸ்ரீகுமார், என்.கிருஷ்ணன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 280ரூ. ஊடகங்களில் பணிபுரிய இப்போது பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. செய்திகளை சேகரிப்பது, துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரின் பணிகள் என்ன? சிறப்புக் கட்டுரை, பேட்டிக் கட்டுரை ஆகியவற்றை எழுதும் முறை, பத்திரிகை தொடர்புடைய சட்டங்கள், தமிழகத்தில் இதழியல் வளர்ந்த வரலாறு போன்றவற்றையும் இந்த நூல் தாங்கி இருப்பதால், இதழியல் பயில்வோருக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் […]

Read more

சுக்கா மிளகா சமூக நீதி

சுக்கா மிளகா சமூக நீதி, மருத்துவர் ச.ராமதாஸ், செய்திப்புனல், விலை 500ரூ.   நாட்டின் விடுதலைப் போராட்டத்தைவிட, இட ஒதுக்கீட்டுப் போராட்டம் மேலானது என்று கூறும் மருத்துவர் ச. ராமதாஸ், சமூக நீதி என்றால் என்ன? அதைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எவை? சமூக நீதியினால் கிடைக்கும் பயன்கள் என்ன? போன்றவற்றை இந்த நூலில் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். உயிரைப் பலி கொடுத்தும், அடக்குமுறைகளை எதிர்கொண்டும் பெற்ற இடஒதுக்கீட்டின் முழுமையான வரலாறு, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியவை ஆகும். பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோருக்கும் […]

Read more

மக்கள் நேயச் சுயமரியாதை

மக்கள் நேயச் சுயமரியாதை, பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலை 200ரூ. சுயமரியாதைக்கென்று ஓர் இயக்கம் பிறந்தது தமிழகத்தில் மட்டும்தான் என்பதும், சுயமரியாதை உணர்ச்சிதான் மனிதனை மனிதன் ஆக்குகிறது என்பதும் இந்த நூலில் விவரமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. சுயமரியாதை குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பெரியார் அறக்கட்டளை திட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய இந்த உரைத் தொகுப்பில், பெரியார் தெரிவித்த புரட்சிகரமான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

வரலாற்றில் புலிப்புரக்கோவில்

வரலாற்றில் புலிப்புரக்கோவில், மா.சந்திரமூர்த்தி, கலைத்தாய் பதிப்பகம், விலைரூ.200. கோவில்களால் பெருமை பெற்றது தமிழகம். சங்க காலத்தில் மரம், செங்கல்லாலும், பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து கற்றளிகளாகவும் அமைத்தனர். சோழர், பாண்டியர், விஜய நகர ஆட்சிகளில் கலை நுட்பமிக்க கோவில்களைக் கட்டினர் என்ற முகவுரையுடன் துவங்குகிறது நுால். மதுராந்தகம் அருகே படாளம் கிராமத்தில் பழமை மிக்க புலிப்புரக்கோவில் பற்றி விளக்குகிறது. வரலாறு, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி வியக்க வைக்கிறது. கொடியாத்தம்மன் கோவில், முக்தீசுவரர், அழகு திருவாத்தம்மன் கோவில் சிறப்புகள் விரிவாக தரப்பட்டுள்ளன. ஆலக்கோவில் என்பது ஆல […]

Read more

தமிழன்னையின் மாட்சி

தமிழன்னையின் மாட்சி, கவிஞர் இரா.கருணாநிதி, வனிதா பதிப்பகம், விலைரூ.140. சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை, விழிப்புணர்வு போன்ற கவிதைகளில் பொது நலப் பார்வையைக் காண முடிகிறது. இயற்கை, இல்லறம், தாய்மை, காதல் மற்றும் கையறு நிலை சார்ந்த கவிதைகளில் இதம் இழையோடுவதை உணர முடிகிறது. பொதுவான தலைப்புகளில் வரும் இசைப்பாடல்கள் மற்றும் தத்துவப் பாடல்களில் மனித நேயம் எதிரொலிக்கிறது. சில மழலைப் பாடல்கள் தாலாட்டுகின்றன. – மெய்ஞானி பிரபாகரபாபு நன்றி: தினமலர், […]

Read more

விடியல் தேடும் பூக்கள்

விடியல் தேடும் பூக்கள், விஜய் மேகா, ஆகாஸ் பதிப்பகம், விலைரூ.100. சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பரமசிவம்என்ற விஜய் மேகா எழுதியுள்ளார். பல்வேறு நாடக நூலை இயற்றியுள்ளார். வட்டார வழக்கில் இந்த நாடக நூல் எழுதப்பட்டுள்ளது சென்னையில் தொடங்கிய காதல், திருச்செந்துார் முருகன் சன்னதியில் மூன்று ஜோடிகளின் திருமணமாய் நிறைவடைந்ததை நகைச்சுவையாகவும் ரசனை மிக்கதாகவும் எழுதியுள்ளார்.ஆசிரியரின் வாழ்வியல் அனுபவங்கள் நாடகத்தில் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. ஆற்றொழுக்கான எளிய நடையில் எழுதப்பட்ட நுால். – […]

Read more

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள், மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு, மணிமேகலைப் பிரசுரம், விலை 140ரூ. பல்வேறு நாடுகளிலும் அரசியல் வாழ்வில் மகத்தான சாதனை புரிந்த 31 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் சாதனைச் சரித்திரம், அவனைவருக்கும் உந்து சக்தியைத் தரும் வகையில் தரப்பட்டு இருக்கிறது. இத்தாலியின் மாவீரன் கரிபால்டி, பிரான்ஸ் நாட்டின் ஜோதன் ஆப் ஆர்க், மங்கோலியாவின் செங்கிஸ்கான், இந்தியாவின் ஜான்சி ராணி, மன்னர் அசோகர் போன்றவர்களின் வீரச் செயல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழகத்தின் மாமன்னர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் போன்றவர்களில் ஒருவரை இந்த நூலில் இணைத்து […]

Read more

அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்கள்

அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்கள், நவீன்குமார், கோரல் வெளியீடு, விலை 250ரூ. தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சான்றோர்களில், திரு.வி.க., உ.வே.சா., பாரதியார், பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், கி.ஆ.பெ.விசுவநாதனார், மு.வரதராசனார், கண்ணதாசன், மீனாட்சி சுந்தரனார் உள்ளிட்ட 23 சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்பு, மற்றும் அவர்களைப் பற்றிய சிறப்பான விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. இவர்கள் ஆற்றிய பணிகளுடன், தமிழ் மொழியின் தொன்மை, அதன் சிறப்பு, தனித்தன்மை ஆகியவற்றையும் இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031041_/ […]

Read more
1 2 3 4 8