சுக்கா மிளகா சமூக நீதி
சுக்கா மிளகா சமூக நீதி, மருத்துவர் ச.ராமதாஸ், செய்திப்புனல், விலை 500ரூ.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தைவிட, இட ஒதுக்கீட்டுப் போராட்டம் மேலானது என்று கூறும் மருத்துவர் ச. ராமதாஸ், சமூக நீதி என்றால் என்ன? அதைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எவை? சமூக நீதியினால் கிடைக்கும் பயன்கள் என்ன? போன்றவற்றை இந்த நூலில் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார்.
உயிரைப் பலி கொடுத்தும், அடக்குமுறைகளை எதிர்கொண்டும் பெற்ற இடஒதுக்கீட்டின் முழுமையான வரலாறு, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியவை ஆகும்.
பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோருக்கும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் இருந்த பங்கு, வன்னியர் சங்கம் நடத்திய மறியல்கள், அதனால் கிடைத்த பயன்கள், மற்ற மாநிலங்களின் இட ஒதுக்கீடு வரலாறு ஆகிய அனைத்தும் தரப்பட்டு இருப்பதால், இந்த நூல், இட ஒதுக்கீடு தொடர்பான கலைக் களஞ்சியம் போலத் திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி, 21/2/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031018_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818