63 நாயன்மார்கள் வரலாறு

63 நாயன்மார்கள் வரலாறு, சிவ.இராஜேஸ்வரி இராசா, பார்த்திபன் பதிப்பகம், விலைரூ.50 சிவன் அடியார்களின் பக்தியும், தொண்டும் சிறப்பாக கதை வடிவில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாயன்மாரின் வரலாற்றையும் படத்துடன் தந்துள்ளார். அரசன், அரசி, அமைச்சர், செல்வர், வணிகர், வண்ணார், குயவர், பாணர், மீனவர் என பலர் பக்தியுடன் சிவபதம் பெற்றதை சுருக்கமாக எழுதியுள்ளார். சிவனடியார் பிறந்த ஊர், முக்தி பெற்ற ஊர், சம்பவம் நிகழிடம் என தொகுத்துள்ளார். -– முனைவர் மா.கி.ரமணன். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தி பேர்ல் கனபி

தி பேர்ல் கனபி – ஆங்கிலம், கே.பரமசிவம், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.500. சங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம், புறம் கலந்த எதுகை சிறப்பமைந்த அழகிய பாக்களை உள்ளடக்கியவை. இனிமையான நான்கடி செய்யுள்களைக் கொண்டது. தலைவனும், தலைவியும் கொண்ட காதல் வேட்கையின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி வீரத்தையும் பின்னிய பாடல்கள் படிக்க இதமானவை. எளிமையான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலக்கியச் செழுமை, இலக்கணப் புனைவுகளை உள்வாங்கி கருத்துக்குப் பொருந்தக்கூடிய சொற்களைத் தேர்ந்து, தமிழ்ப் பண்பாட்டுக் […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழுத்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அவர் வார்த்தைகளை படித்துக் கொண்டு வேறெதையும் சிந்திக்க முடியாது. அந்த வார்த்தைகள் படமாக மனக் கண்ணில் விரிந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்து நாடகமாடும். இது, அவரது வார்த்தைகளுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா… என் கூட்டுக்காரா… ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம். அழகனை, […]

Read more

என்னை வளர்த்த சான்றோர்

என்னை வளர்த்த சான்றோர், டி.கே.எஸ். கலைவாணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.175 பிரபல நடிகர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது மகன், குழந்தைப் பருவம் பற்றி எழுதியுள்ள அனுபவ நுால். தாய், தந்தை மற்றும் ஆசான்களுடன் பழகிய நாட்களை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த சிறுவனின் இளமைக் காலம் மிளிர்கிறது. சம்பவங்கள், நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரகாசித்த நட்சத்திரங்களின் இயல்புகளை, அனுபவச் சுவட்டில் இருந்து கொட்டியுள்ளார். பணிவும், நெருக்கமும் வெளிப்படுகிறது; நகைச்சுவை படர்கிறது. பிரபலமாக இருந்த கலைவாணர், இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தன், […]

Read more

உவர்

உவர்,  இரா.சிவசித்து, மணல்வீடு, பக்.152, விலை ரூ.150;  மணல்வீடு, ஓலைச்சுவடி, கனலி ஆகிய இதழ்களில் வெளிவந்த 9 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது, கிராம மக்களின் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் வாசகருக்குள் நிகழ்கிறது. பாத்திரங்களின் பேச்சு, கதையாசிரியரின் விவரிப்பு, நிகழும் சம்பவங்கள் அனைத்தும் கிராமத்து மண்ணில் வேர்விட்டு வளர்ந்தவை. உவர் சிறுகதையின் நீலமேகம் மாமா போன்ற மனிதர்களை இப்போதும் பார்க்க முடியும். சிறிய, பெரிய விஷயங்களுக்காக மனிதர்களுக்குள் நடைபெறும் அடிதடி சண்டைகள், வசவுகள் கூடவே அவற்றையெல்லாம் மீறி பொங்கி வழியும் அன்பு […]

Read more

சிலிங்

சிலிங்,  கணேசகுமாரன்; எழுத்து பதிப்பகம்,  பக். 85,,  விலை ரூ. 110; கண்ணாடி உடையும் போது கிடைக்கும் ஒலியாகிய சிலிங் என்பதையும், இப்போதைய சூழலில் பெரும்பாலானோருக்குத் தேவைப்படும் மனோதத்துவ கவுன்சிலிங் என்பதன் கடைசி மூன்று எழுத்தைக் கொண்ட சிலிங்- கும் தான் தனது குறுநாவலின் பெயருக்கான பொருள் என்கிறார் நூலாசிரியர். இரு பாகங்கள். முதல் பாகம் 12 பகுதிகளைக் கொண்டது. ஒரு பகுதி கதையாகவும், அடுத்த பகுதி டைரிக் குறிப்பாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாகம் 12 பகுதிகளைக் கொண்டது. இதில் 10ஆவது பகுதி மட்டும் […]

Read more

இறையுதிர்காடு

இறையுதிர்காடு,  இந்திரா சௌந்தர்ராஜன், பக்.1104, (2 தொகுதிகள்); விகடன் பிரசுரம், விலை ரூ.1350; இறையுதிர் காடு- ஆனந்த விகடனில் 87 அத்தியாயங்களுடன் தொடராக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்றால் அது மிகைஅல்ல. சித்தர்களில் போற்றுதலுக்குரியவரும், பிரசித்திப் பெற்றவருமானவர் போகர். பாஷாணங்களின் சேர்மானத்தை நேர்த்தியாக கையாள்வதில் வித்தகர். பழனிமலை முருகப் பெருமானுக்கு நவபாஷாணத்தாலான சிலையொன்றை உருவாக்கியவர். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். முன்னதாக சோதனை முயற்சியாக லிங்கமொன்றை உருவாக்கினார். சிலையை மலைக்கும், லிங்கத்தை உலக வெளிக்கும் என நிர்மாணித்தார். சிலை […]

Read more

துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள் , தொகுப்பு: துளிர் ஆசிரியர் குழு, அறிவியல் வெளியீடு, பக்.152; விலை ரூ.150;  துளிர் மாத இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குழந்தைகளுக்குப் புரியும்வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியவையாக உள்ளன. கரோனா வைரஸ் பற்றி உலகையே ஆளும் வைரஸ் கட்டுரை விவரிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லாம் இணைந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. மருத்துவ உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்விதமாக "மருத்துவர்களுக்கு உதவும் […]

Read more

லயம்

லயம்,  க.மணி; அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.100, விலை  ரூ.100. நேரத்துக்குப் பசிப்பது, தூக்கம் வருவது எல்லாமே உடல் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதையே காட்டுகிறது. இந்த குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளையே லயம் என்கிறார் நூலாசிரியர். வேலை காரணமாகவோ, இதர காரணங்களினாலோ நாம் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவதில்லை; உண்ண வேண்டிய நேரத்தில் உண்பதில்லை. இது பல்வேறு உடல் நல, மன நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. உடலின் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு எப்படி வாழ வேண்டும்? என்பதை நூல் விளக்குகிறது. நன்றாகத் தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? […]

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக். 292;  விலை ரூ. 86 . சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்காக கிருபானந்த வாரியார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம், பெரிய புராணச் சிறப்பு, கந்தபுராண நுண்பொருள், ராமாயண சாரம், சைவ சித்தாந்தம் ஆகிய எட்டு தலைப்புகளில் அவர் ஆற்றிய உரைகளைப் படிக்கும்போது, வாரியாரின் பேச்சை நேரில் கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இடையிடையே அவர் கூறும் உதாரணங்களும், குட்டிக் கதைகளும் நகைச்சுவையுடன், […]

Read more
1 6 7 8