லயம்
லயம், க.மணி; அபயம் பப்ளிஷர்ஸ், பக்.100, விலை ரூ.100.
நேரத்துக்குப் பசிப்பது, தூக்கம் வருவது எல்லாமே உடல் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதையே காட்டுகிறது. இந்த குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளையே லயம் என்கிறார் நூலாசிரியர்.
வேலை காரணமாகவோ, இதர காரணங்களினாலோ நாம் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவதில்லை; உண்ண வேண்டிய நேரத்தில் உண்பதில்லை. இது பல்வேறு உடல் நல, மன நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
உடலின் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு எப்படி வாழ வேண்டும்? என்பதை நூல் விளக்குகிறது.
நன்றாகத் தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? படுக்கையறையில் நீல வண்ண விளக்கு எரிந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? தூங்குவதற்கு முன்பு எவற்றையெல்லாம் சாப்பிடக் கூடாது? என தூக்க லயம் பற்றி விவரிக்கப்படுகிறது.
அதுபோன்று, என்ன உணவுகளை, எந்த நேரத்தில், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை உணவு லயம் பகுதியும், உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை உழைப்பு லயம் பகுதியும் விரிவாக விளக்குகின்றன.
அறிவுத்திறன் மேம்படவும், நினைவாற்றல் பெருகவும் இந்த லயம் மீறாத வாழ்க்கைமுறை எப்படி உதவுகிறது என்பதை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். உணவு, உறக்கம், உழைப்பு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தேக லயத்தைக் கடைப்பிடித்தால் காலை முதல் மாலை வரை உங்களது உள்ளம், உடல், அறிவு உச்சம் தொடும் என்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 1/3/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031196_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818