துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள் , தொகுப்பு: துளிர் ஆசிரியர் குழு, அறிவியல் வெளியீடு, பக்.152; விலை ரூ.150; 

துளிர் மாத இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குழந்தைகளுக்குப் புரியும்வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியவையாக உள்ளன. கரோனா வைரஸ் பற்றி உலகையே ஆளும் வைரஸ் கட்டுரை விவரிக்கிறது.

பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லாம் இணைந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. மருத்துவ உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்விதமாக "மருத்துவர்களுக்கு உதவும் பொறியியல் தொழில்நுட்பங்கள்' கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, பறவைகள்,திமிங்கலச்சுறாக்கள், கடல் ஜெல்லிகள் என அறிவியலின் பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஓரிகாமி காகித மடிப்புக்கலை, சவர்க்காரம் செய்யும் முறை, நான் ஸ்டிக் தோசைக்கல் என வித்தியாசமான பலரும் அறியாத தகவல்களைச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.

பசு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது என்ற கூற்று உண்மையானதா என்று ஒரு கட்டுரை ஆராய்கிறது. உயிரினங்கள் சுவாசிக்கும் எல்லா முறைகளைப் பற்றியும் விவரித்து, பசு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடவில்லை என்கிற முடிவுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட அறிவியலாளர்கள் பற்றியும், அவர்களுடைய கண்டுபிடிப்புகளைப் பற்றியும்;நோபல் பரிசு 2020 வேதியியல் மரபணு கத்தரிக்கோல் கட்டுரை விளக்குகிறது.

அறிவியல் மனப்பான்மை அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் வண்ணப் படங்களுடன் அனைவரையும் கவரும்விதமாக வெளியிடப்பட்டுள்ள பயனுள்ள நூல்.

நன்றி: தினமணி, 1/3/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031197_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *