101 கேள்விகள் 100 பதில்கள்

101 கேள்விகள் 100 பதில்கள் , சு.தினகரன், அறிவியல் வெளியீடு, பக்.102, விலை ரூ.80. பலவிதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை நிறுத்தி, அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான பதில்களையும் இந்நூல் கூறுகிறது. நமக்குத் தெரியாத, நமக்கு வியப்பூட்டுகிற பல அறிவியல் தகவல்கள் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும்விதத்தில் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல நமது அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஸ்வீடனைச் சேர்ந்த உப்பசாலா பல்கலைக்கழக ஆய்வுக்குழு தினமும் பால் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு பலவீனப்படுவதாக அறிக்கை ஒன்றை […]

Read more

அழகிய இந்தியா

அழகிய இந்தியா – தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்,  தரம்பால், தமிழில் – பி.ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 264, விலை ரூ. 300;    தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்தான் அழகிய இந்தியா என்ற இந்த நூல் என்றாலும் அவரைப் பற்றிய, அவருடைய எழுத்துகள் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன்வைக்கிறது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்னரே இந்தியாவில் கல்வி நிலை உலகின் பிற பகுதிகளை விடச் சிறப்பாக இருந்தது; பிரிட்டிஷார் இங்கு வந்து பாரம்பரியக் கல்வி எனும் அந்த அழகிய மரத்தை […]

Read more

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும்

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும்,  க.பஞ்சாங்கம், காவ்யா,  பக்.126. விலை ரூ.150. மகாகவி பாரதியாரின் முப்பெரும் பாடல்கள் என்று அறியப்படுவதில் 23 பாடல்கள் கொண்ட கண்ணன் பாட்டு தொகுப்பும் ஒன்று. முற்றிலும் கவிரசம் ததும்புவதாலேயே அவரது படைப்புகளில் முக்கியமானவற்றில் ஒன்றாக இது இடம் பெறுகிறது. பாரத தத்துவ, இலக்கிய இயலில் தோய்ந்த கவிச் சிந்தனைகளை கண்ணன்- கண்ணம்மா என்கிற பாவனையில் வடித்துள்ளார் மகாகவி. இதிகாச கண்ணனைப் போலவே பாரதியாரின் கண்ணனுக்கும் அரசன், காதலி, ஆசான், சேவகன் என பல தோற்றங்கள். அபத்தக் […]

Read more

அஷ்டாவக்ர கீதை

அஷ்டாவக்ர கீதை,  க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.350, விலை ரூ.400. அஷ்டாவக்ரர் என்கிற ஞானி ஒரு துறவி. மன்னர் ஜனகர் ஒரு கர்மயோகி. இருவரும் சந்தித்து தத்துவார்த்தமாக உரையாடினால் எப்படி இருக்கும்? இந்த உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். இருபது அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூலில் பதினொரு அத்தியாயங்கள் அஷ்டாவக்ரருடைய உபதேசமாகவும், ஒன்பது அத்தியாயங்கள் ஜனகர் தனது அனுபவங்களைக் கூறும்விதமாகவும் அமைந்துள்ளன. ஞானி என்பவன் யார் என்று கூறுமிடத்தில் அஷ்டாவக்ரர், ஞானி என்பவன் எந்த குலத்தையும் சேர்ந்தவன் அல்லன். அவன் வடிவம் உடம்பு அல்ல. அதனால் அவன் […]

Read more

எத்தனை கோணம் எத்தனை பார்வை

எத்தனை கோணம் எத்தனை பார்வை, சீத்தலைச்சாத்தன், ஒப்பிலாள் பதிப்பகம், விலைரூ.99. கவிஞர் கண்ணதாசனின் பார்வைகள் பற்றி ஐந்து தலைப்புகளில் மிளிரும் நுால். கண்ணதாசனின் அனுபவங்களும் பளிச்சிடுகின்றன. என்ன துணிச்சல், யாருக்கு வரும் இந்தத் துணிச்சல், மணவிழாப் பாட்டு கேள்விப்பட்டது உண்டு. ஆனால், இறந்த பின் இறுதி ஊர்வலத்தில் பாட, 1966ல் எழுதிய மரண சாசனம், ஏழு பாடல்களில் எழுதியுள்ளார் கண்ணதாசன். கண்ணதாசன் வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான தகவல்களைத் தருகிறது. – பேராசிரியர் இரா.நாராயணன், நன்றி: தினமலர், 3/1/21, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்

ஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள், கா.ஜோதி, கவிநிலா பதிப்பகம், விலைரூ.130. சிறு சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 100 கதைகள் உள்ளன. அன்றாடம் செய்திகளில் அடிபடும் சம்பவங்களை, அறத்துடன் கோர்த்து கதைகளாக்கியுள்ளார். மிகச் சாதாரணமான சம்பவங்கள் கூட கதைகளாகியுள்ளன. எச்சரிக்கும் விதமாகவும், அறிவுறுத்தும் வகையிலும், சேவைகளை மேன்மைப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன. முன்னுதாரணமாக பல கதைகள் அமைந்து உள்ளன. நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

பால் டம்ளர்

பால் டம்ளர், ராஜி ரகுநாதன், கனவு, விலைரூ.150. தெலுங்கு மொழி பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில், 21 எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கதைகள் அனைத்தும் தெலுங்கு மொழி பத்திரிகைகளில் வெளியவந்து புகழ் பெற்றவை. தெலுங்கு மொழி பேசும் பகுதிகளின் தன்மையை பிரதிபலிக்கின்றன. புதுமையான திருப்பங்களைக் கொண்டுள்ளன.மிகவும் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்வின் நுட்பங்களை உணர்த்தும் புனைவுகளின் தொகுப்பு நுால். நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030843_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?

பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?, ப.க.பொன்னுசாமி, கனவு வெளியீடு, விலைரூ.80. பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பணியாற்றிய பேராசிரியரின் கட்டுரை தொகுப்பு நுால். சில கட்டுரைகள், அவர் படித்த கல்வி நிறுவனங்களை சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளன. இரண்டு தீபாவளி என்ற கட்டுரையில், சோக நிகழ்வுகள் சொல் ஓவியமாகியுள்ளன. மகன் நாவரசு நினைவுடனும், ஆழ்துளைக் குழாயில் உயிர் விட்ட சிறுவன் சுஜித் நினைவுடனும் வரைந்துள்ளார். சென்னையிலிருந்து புறப்படும் நிகழ்வை ஒரு கட்டுரையாக வடித்துள்ளார். சென்னை வரும்போது, மகன் இருந்தான்; நாய் ஜானியும் இருந்தது. போகும்போது மகனும் இல்லை; […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275. வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more

பிடிச்சிருக்கா

பிடிச்சிருக்கா, ம. திருவள்ளுவர், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார். உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், கலாம் போல உயர்ந்த மனிதராக மாறியாக வேண்டும். அதற்கு உரிய ஆற்றல், திறமையை உரிய நேரத்தில் கண்டு உணர வேண்டும். காத்திருக்கப் பழக வேண்டும். பொறுமையை வளர்க்க வேண்டும். வெற்றியின் இலக்கணமாக தொடர் தோல்விகளுக்குத் […]

Read more
1 4 5 6 7 8