வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275.

வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது.

கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார்.

வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம், சிக்கல் எண்கள், வகுபடு தன்மை, இயற்கணிதம், நுண்கணிதம், இருபடி சமன்பாடு, பிதாகோரஸ் தேற்றம் போன்றவற்றை மிகக் குறைந்த நேரத்தில் விரைவாக விடை காணும் முறைகளை விளக்கியுள்ளார்.

வேதக் கணக்கின், 32 சூத்திரங்களும் தரப்பட்டுள்ளன. இதன் விளக்கத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கியுள்ளார். கணிதக் காதலர்களுக்கு உதவும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

நன்றி: தினமலர், 3/1/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030921_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *