அந்த விளக்கின் ஒளி பரவாதது

அந்த விளக்கின் ஒளி பரவாதது,  அகச்சேரன், புது எழுத்து, விலை: ரூ.50. குறைவாகவே எழுதினாலும் அதில் ஒரு திருப்தி காண்பவர் அகச்சேரன். அவருடைய ‘அன்பின் நடுநரம்பு’ கவிதைத் தொகுப்பு வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து இந்த நூல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 29 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சிறியதே அழகு’ என்பதற்கொப்ப தொகுப்பும் சிறியது, கவிதைகளும் சிறியவை. காலத்துக்கேற்ப கவிதைகளில் பல்வேறு போக்குகள் ஏற்பட்டாலும் சில விஷயங்கள் மட்டும் கவிதைகளுக்கு என்றும் மாறாதவை. அவற்றுள் இருத்தலின் பதைபதைப்பும் ஒன்று. நவீன மனிதனுக்கு ஒவ்வொரு பொழுதின் […]

Read more

ஏ.ஜி.கே. எனும் போராளி

ஏ.ஜி.கே. எனும் போராளி, தொகுப்பு: மு.சிவகுருநாதன், பன்மை வெளியீடு, விலை: ரூ.290 கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்த நிலவுடையாளர்களுக்கு எதிராகப் போராடி, உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த முதன்மையான தலைவர்களில் ஒருவர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்(1932-2016). பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் தனது வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டவர். இரண்டுக்கும் இடையில் இணக்கம் கண்ட முன்னோடி. திராவிட, மார்க்ஸிய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வழியே மக்கள் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர். கூடவே, தமிழ்த் தேசிய உணர்வையும் ஏற்றுக்கொண்டவர். 44 உயிர்களைக் குடித்த வெண்மணிக் கொடுமைக்குக் காரணம் கூலி உயர்வுப் போராட்டம் […]

Read more

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2, கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப்பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்தஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதி புத்தகமாக வெளியான முதல் தொகுப்பானது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. யோக […]

Read more

இரவு எலீ வீஸல்

இரவு, எலீ வீஸல், தமிழில்: ரவி, தி. இளங்கோவன், எதிர் வெளியீடு, விலை: ரூ.230 மறதிக்கு எதிராக நினைவின் கலகத்தை ஒத்தது அதிகாரத்துக்கு எதிராக மனிதன் நடத்தும் யுத்தம் என்ற மிலன் குந்தேராவின் கூற்றுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் ஆக்கம் எலீ வீஸல் எழுதிய ‘இரவு’ சுயசரிதை. தற்போது ருமேனியாவாக இருக்கும் நாட்டில் சிகெட் என்னும் சிறுநகரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்த எலீ வீஸல், சிறுவனாக இருந்தபோதே யூத வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பெற்றோரையும் சகோதரியையும் அங்கேயே பறிகொடுத்தவர். சென்ற நூற்றாண்டில் யூதர்கள் மீது […]

Read more

நீதி: ஒரு மேயாத மான்

நீதி: ஒரு மேயாத மான், கே.சந்துரு, போதிவனம் வெளியீடு, விலை: ரூ.200. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 37 கட்டுரைகளின் தொகுப்பு. தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளுடன் இயற்றப்படுகிற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள், காவல் துறை நிகழ்த்தும் போலித் தற்காப்புக் கொலைகள், மதச்சார்பின்மைக் கோட்பாடு எதிர்கொள்ளும் சவால்கள், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டங்கள், வெளிப்படைத் தன்மையற்ற நீதிபதி நியமனங்கள் என இந்திய அரசமைப்பின் அடிப்படைகள் […]

Read more

உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.120   கலை, இலக்கியம், நாடகம் தொடர்பான வெளி ரங்கராஜனின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு இது. நேரடிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாக மொத்தம் 22 கட்டுரைகள். கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதன் வழியாக சமூக வரலாற்றைப் பேசும் புத்தகமாகவும் இந்நூலை வாசிக்க இடமுண்டு. பிரதிகள் சார்ந்ததாக மட்டுமல்லாமல் நபர்களும், அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின் பிரதிபலிப்புகளும் விவாதமாகியிருப்பது இந்நூலின் தனித்துவம் எனலாம். நன்றி: தமிழ் இந்து, 2/1/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029820_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

காஷ்மீரியன்

காஷ்மீரியன், தேவராஜ் விட்டலன், பிறை பதிப்பகம், விலை: ரூ.110 இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் தேவராஜ் விட்டலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஷ்மீரியன்’. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்குப் புலம்பெயரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார். இந்தப் பணியினூடாகப் பெற்ற அனுபவங்களும், சொந்த நிலத்தின் வேர் அறுந்த துயரங்களும் இந்தத் தொகுப்பில் புனைவுகளாக உருப்பெற்றுள்ளன. நகர வாழ்க்கை மீது தொடர்ந்து உருவாகிக்கொண்டே வரும் மிகை வெளிச்சத்துக்குப் பலியாகும் இடங்களையும், நகரம் தரும் நவீன வாழ்க்கையின் போதாமைகளில் வெளிப்படும் கிராமத்தின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன. அடுத்த […]

Read more

உழவுத் தொழிலுக்குப் போர்த்தப்படுவது

உழவுத் தொழிலுக்குப் போர்த்தப்படுவது, வெ.ஜீவகுமார், என்சிபிஹெச் வெளியீடு, விலை: ரூ.25 இயற்றப்படும் சட்டங்களைப் பற்றி அவைகளில் விவாதிக்கிறபோது உறுப்பினர்களின் வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிக்கப்படுவது ஜனநாயக விரோதம். வேளாண் சட்டங்கள் குறித்த விமர்சனங்கள் இந்தக் குற்றச்சாட்டிலிருந்தே தீவிரம் கொள்கின்றன. சிறுகுறு விவசாயிகளின் நிலை என்னவாகும் என்ற அச்சம், பாதிக்கப்பட்டவருக்கான நிவாரணங்கள் குறித்து நிலவும் தெளிவின்மை, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உறுதியின்மை ஆகியவற்றை இந்தக் குறுநூல் விவாதிக்கிறது. இந்நூலை எழுதிய தஞ்சை வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் விவசாயிகளின் உரிமைகளுக்கான களச் செயல்பாட்டாளர் என்பதால், சட்டரீதியான விளக்கங்களுடன் இந்திய விவசாயிகள் […]

Read more

சிப்பியின் வயிற்றில் முத்து

சிப்பியின் வயிற்றில் முத்து, போதிசத்வ மைத்ரேய, தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு, விலை: ரூ.105 இந்தியாவின் தென்கோடியில் மன்னார் வளைகுடாப் பகுதியில் எடுக்கப்படும் சங்குகள், இந்தியாவில் இன்னொரு மூலையில் இருக்கும் வங்கத்தில் மட்டுமே விலைபோகிறது. வங்கக் கைவினைக் கலைஞர்கள்தான் தூத்துக்குடி சங்கில் நகைகள் செய்வதற்குப் பெயர்போனவர்கள். தென்தமிழகத்தின் மூலையில் ஆழ்கடலில் கிடைக்கும் சங்கு, தேசத்தின் இன்னொரு மூலையில் நகையாகும் விந்தைக்கு இணையான நாவல் படைப்புதான் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’. இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தை மையமாக வைத்து, பாரம்பரியம் மிக்க […]

Read more

உலக மக்களின் வரலாறு

உலக மக்களின் வரலாறு , கிரிஸ் ஹார்மன்; தமிழில்: நிழல்வண்ணன், மு.வசந்தகுமார்; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , பக்.1088, விலை ரூ.750. வரலாறு என்பது ஆட்சியாளர்களின் வரலாறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய காலம், அவர்களுடைய வழித்தோன்றல்களின் காலம் ஆகியவற்றின்போது நிகழ்ந்த நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இந்த நூல், இதற்கு மாறாக வரலாற்றை மக்களின் வரலாறாகக் காண்கிறது. மனிதன் உயிர் வாழ்வதற்காக மேற்கொண்ட வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள், நிலையான குடியிருப்புகள் தோன்றியது, நேரடி உழைப்பில் […]

Read more
1 3 4 5 6 7 8