அந்த விளக்கின் ஒளி பரவாதது
அந்த விளக்கின் ஒளி பரவாதது, அகச்சேரன், புது எழுத்து, விலை: ரூ.50.
குறைவாகவே எழுதினாலும் அதில் ஒரு திருப்தி காண்பவர் அகச்சேரன். அவருடைய ‘அன்பின் நடுநரம்பு’ கவிதைத் தொகுப்பு வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து இந்த நூல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 29 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
‘சிறியதே அழகு’ என்பதற்கொப்ப தொகுப்பும் சிறியது, கவிதைகளும் சிறியவை. காலத்துக்கேற்ப கவிதைகளில் பல்வேறு போக்குகள் ஏற்பட்டாலும் சில விஷயங்கள் மட்டும் கவிதைகளுக்கு என்றும் மாறாதவை. அவற்றுள் இருத்தலின் பதைபதைப்பும் ஒன்று.
நவீன மனிதனுக்கு ஒவ்வொரு பொழுதின் விடியலும் நம்பிக்கையை அல்ல, அச்சத்தையே கொண்டுவருகிறது. இன்றைய நாள் என்ன துயரத்தைக் கொண்டுவருமோ, எப்படிப்பட்ட அதிர்ச்சிகளைக் கொண்டுவருமோ என்ற அச்சத்துடனே நாளைத் தொடங்க வேண்டியிருக்கிறது.
‘நாளின் துவக்கம் என்னை
நான்கு எட்டாக மடித்து
பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறது’
என்ற வரிகளில் இதைத்தான் பார்க்க முடிகிறது. அதுவும் நாள் தனது பிருஷ்ட பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மூச்சடைக்கச் செய்வது போன்ற அனுபவம்தான் கவிஞரைப் போலவே பலருக்கும் ஏற்படுகிறது.
இதையேதான்
‘எப்போதும் இல்லாத அளவுக்கு
வாழ்தலின் பயம் மிகுந்திருப்பதை
தெருமுகங்களில் காண்கிறேன்’
என்று வேறொரு கவிதை கூறுகிறது.
நன்றி: தமிழ் இந்து, 16/1/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818