உழவுத் தொழிலுக்குப் போர்த்தப்படுவது
உழவுத் தொழிலுக்குப் போர்த்தப்படுவது, வெ.ஜீவகுமார், என்சிபிஹெச் வெளியீடு, விலை: ரூ.25
இயற்றப்படும் சட்டங்களைப் பற்றி அவைகளில் விவாதிக்கிறபோது உறுப்பினர்களின் வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிக்கப்படுவது ஜனநாயக விரோதம். வேளாண் சட்டங்கள் குறித்த விமர்சனங்கள் இந்தக் குற்றச்சாட்டிலிருந்தே தீவிரம் கொள்கின்றன. சிறுகுறு விவசாயிகளின் நிலை என்னவாகும் என்ற அச்சம், பாதிக்கப்பட்டவருக்கான நிவாரணங்கள் குறித்து நிலவும் தெளிவின்மை, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உறுதியின்மை ஆகியவற்றை இந்தக் குறுநூல் விவாதிக்கிறது.
இந்நூலை எழுதிய தஞ்சை வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் விவசாயிகளின் உரிமைகளுக்கான களச் செயல்பாட்டாளர் என்பதால், சட்டரீதியான விளக்கங்களுடன் இந்திய விவசாயிகள் கடந்துவந்த வரலாற்றுத் தருணங்களையும், இன்றைய விவசாய நிலையையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளார். சட்டங்களின் விளைவுகள் குறித்து அவர் அளித்திருக்கும் பட்டியல் கவனத்துக்குரியது.
நன்றி: தமிழ் இந்து, 2/1/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818