காஷ்மீரியன்
காஷ்மீரியன், தேவராஜ் விட்டலன், பிறை பதிப்பகம், விலை: ரூ.110
இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் தேவராஜ் விட்டலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஷ்மீரியன்’. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்குப் புலம்பெயரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார்.
இந்தப் பணியினூடாகப் பெற்ற அனுபவங்களும், சொந்த நிலத்தின் வேர் அறுந்த துயரங்களும் இந்தத் தொகுப்பில் புனைவுகளாக உருப்பெற்றுள்ளன. நகர வாழ்க்கை மீது தொடர்ந்து உருவாகிக்கொண்டே வரும் மிகை வெளிச்சத்துக்குப் பலியாகும் இடங்களையும், நகரம் தரும் நவீன வாழ்க்கையின் போதாமைகளில் வெளிப்படும் கிராமத்தின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன.
அடுத்த தலைமுறை மீது நம்பிக்கை இழந்து, அவர்களுக்காக மெனக்கெடும் தற்போதைய தலைமுறையின் பதற்றம் நுட்பமாக வெளிப்படுகிறது. காஷ்மீரைப் பற்றி யார் எழுதினாலும் தொடர் அலைவுறுதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் இனத்தின் துயரத்தை எழுதாமல் கடந்துசெல்ல முடியாது. தென்புலத்தைச் சார்ந்த ராணுவ வீரனுக்கும் போர்ட்டராகப் பணியாற்றும் காஷ்மீரியன் ஒருவனுக்கும் இடையே உருவாகும் ஆத்மார்த்தமான உறவைப் பேசும் கதை குறிப்பிடத்தக்கது.
நன்றி: தமிழ் இந்து, 2/1/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030925_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818