பட்டினத்தார் தத்துவம்

பட்டினத்தார் தத்துவம், கு. பொன்மணிச்செல்வன், செந்தமிழ் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. காதறுந்த ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே என்ற ஞான வரிகளுக்கும், பட்டினத்தாருக்கும் உள்ள தொடர்பு தமிழகம் அறிந்தது. அத்தகைய சித்தர், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழநாட்டின் பெருநகரமாகவும், மிகப்பெரிய துறைமுகமாகவும் விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில், செல்வம் கொழிக்கும் முதன்மை வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர். இவர் மாடமாளிகை, அயல்நாட்டு வணிகம், இன்பமான குடும்ப வாழ்க்கை, ஏராளமான பணியாளர்கள்… என்று செல்வச் செழிப்போடு வாழ்ந்தார். ஒருநாள் […]

Read more

தமிழ்ச் சான்றோர்கள்

தமிழ்ச் சான்றோர்கள், ஆர். குழந்தை அருள், செந்தமிழ் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. உலக மனித இனத்திற்கே முதல் இனம் தமிழ் இனம். உலக மொழிகளுக்கெல்லாம் முதல் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி என பெருமைப்பட்டுக் கொண்டாலும், அந்த மொழி வளர்ச்சிக்கு தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் வலிமை குறைவே என்றால் அது மிகையாகாது. தமிழ்ச் சான்றோர்கள் எனும் இந்த நுாலில், 21 தமிழ் அறிஞர்களின் வரலாறும், தமிழ் வளர்க்க அவர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மகா வித்வான் […]

Read more

வீர சாவாக்கர்

வீர சாவாக்கர், மொழிபெயர்த்தவர் பி.ஆர். ராஜாராம், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. அகிம்சை வழி நல்லதுதான். ஆனால் கொடூரமான எதிரிகளிடம் அகிம்சை முறை சரிப்பட்டுவராது என்ற கொள்கையுடைய சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்போல, இந்தியாவின் சுதந்திரத்திற்காக, சாவாக்கர் நடத்திய ஆயுதப்போராட்டம் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளின் கொடுமையான தண்டனைகள், தியாகிகள் அனுபவித்த சித்ரவதைகள், பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —-   திருமணப் பொருத்தம், துபாய் டி. ராமகிருஷ்ணன், […]

Read more

தமிழும் ஈழமும்

தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ. இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு […]

Read more