தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, பக். 80, விலை 45ரூ. தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல், தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும்இலக்கணம் உண்டு. அகம்,புறம் என வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம். மூதறிஞர் தமிழண்ணல் புலமையருள் புலமையர் தொல்காப்யித்தை முழுதுணர்ந்து கற்று உரை கண்ட அறிஞர். தொல்காப்பியத்துள் தலைவன் தலைவியர் இலக்கணம் வகுத்துள்ளபாங்கில், இருவர்க்கு இடையிலான […]

Read more

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ்

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ், ஸ்ரீஹரி, நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112. ஒரு புகைப்படக் கலைஞர் பயணக்கட்டுரை எழுதுவதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வது. இரண்டு அதன் உண்மைத்தன்மையைப் புகைப்படங்கள் நமக்கு காட்சிப்படுத்துவது. அதைத்தான் ஸ்ரீஹரி தன்னடைய ஜெர்மன், சுவிட்சர்லாந்து அனுபவங்களை புகைப்படக்காரர் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கியிருக்கிறார். மதர்தெரஸா உள்ளிட்ட பலரின் பதிவு நம்மை உற்சாகப்படுத்துகிறது. வளர்ந்துவரும் […]

Read more

தமிழும் ஈழமும்

தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ. இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு […]

Read more