யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ்

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ், ஸ்ரீஹரி, நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112.

ஒரு புகைப்படக் கலைஞர் பயணக்கட்டுரை எழுதுவதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வது. இரண்டு அதன் உண்மைத்தன்மையைப் புகைப்படங்கள் நமக்கு காட்சிப்படுத்துவது. அதைத்தான் ஸ்ரீஹரி தன்னடைய ஜெர்மன், சுவிட்சர்லாந்து அனுபவங்களை புகைப்படக்காரர் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கியிருக்கிறார். மதர்தெரஸா உள்ளிட்ட பலரின் பதிவு நம்மை உற்சாகப்படுத்துகிறது. வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு மத்தியில் இன்னும் ஒரு ஜீவனுள்ள கலையாக புகைப்படக் கலையை வளர்த்தெடுக்கும் முயற்சி அவரது ஈடுபாட்டில் தெரிகிறது. நன்றி: குமுதம், 18/12/13.  

—-

 

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்ப்பேராயம், திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம், மாவட்டம், பக். 80, விலை 45ரூ.

கவிஞர், ஆய்வாளர், உரையாசிரியர், பேராசிரியர் எனப் பலநிலைகளில் சிறப்புப்பெற்ற முனைவர் தமிழண்ணலின் ஆய்வுப்பயணத்தில் குறிப்பிடத்தக்க நூல். தமிழரின் பெருமையை உணர்த்தும் தொல்காப்பியம் கூறும் திருமணத்திற்குமுன் பார்க்க வேண்டிய பத்து திருமணப்பொருத்தம் குறித்தும் மணமக்களுக்கு ஆகாத 12 தீய இயல்புகளையும் ஆராய்ந்துள்ளார். அதோடு, ஆரிய திருமண முறையையும், இக்கால போலி ஜோதிடர்களின் பொருத்தம் பார்க்கும் முறையையும் கடிந்துள்ளதுடன், அதனை தக்க ஆதாரங்களுடன் நிறுவுகிறார். அதற்கு அவரது ஆய்வு நடையும் சுவையான எழுத்தும் உதவுகின்றன. நன்றி: குமுதம், 18/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *