எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை

எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை, எம்.பொன்னுசாமி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.110. உளவியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் அமைந்தவை. ஆசிரியரின் பணி ஓய்வுக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வார்த்தைத் தோரணங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. அவற்றில், ‘மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது எளிதான செயல் அல்ல. காரணம், மனதில் ஆசைகள், விருப்பங்கள், நோக்கங்கள் பல உள்ளன. மனதைக்கட்டுப்படுத்த, உலகியல் சார்ந்த ஆசைகளை நீக்கிவிடல் முதல்படி’ என எழுதியுள்ளார். தன்னம்பிக்கைக் கருத்துகள் முழுதும் விரவிக் கிடக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ள வழிகாட்டி நுால். – வி.விஷ்வா […]

Read more

தமிழ்த் தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும்

தமிழ்த் தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும், ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், விலைரூ.150. தமிழ் இலக்கண, இலக்கிய நுால்கள் மற்றும் தமிழக வரலாற்று மீட்பிற்குப் பெரும் பங்காற்றியவர் உ.வே.சா., அவரது இளமைக் காலமும் துவக்க நிலை தமிழ்க் கல்வியும், பெரம்பலுார் மாவட்டத்தில் சில கிராமங்களோடு பின்னிப் பிணைந்திருந்தது. பிறந்தது தஞ்சை மாவட்டமாக இருந்தாலும், கற்றதும், அவரது குடும்பத்தை தாங்கிப் பிடித்ததும், பெரம்பலுாரே என சான்றுகளோடு நிறுவப்பட்டுள்ளது. உ.வே.சா.,வின் தந்தை அரியலுார் ஜமீனில் பணியாற்றியது, அந்த ஜமீன் நொடித்துப் போனது போன்ற விபரங்கள் உள்ளன. அக்காலகட்டத்தில், அந்த […]

Read more

சுத்தம் சுகம் தரும்

சுத்தம் சுகம் தரும், ஆர்.ஜான்ராபர்ட், ஜான்சன் பதிப்பகம், விலைரூ.80. சுகாதாரம் பற்றி எளிமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதலில், ‘சுகாதாரம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் துவங்குகிறது. சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவம் இதில் வலியுறுத்தப்படுகிறது. அடுத்து, ‘உணவுப் பழக்கமும் சுகாதாரமும்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. உணவுக்கு உள்ள முக்கியத்துவம் இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்து, ‘வீட்டினுள் சுகாதாரம்’ என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் இந்நுாலில் அடங்கியுள்ளன. – மலர் […]

Read more

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல்

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல், கவிஞர் ஒளவை நிர்மலா, விழிச்சுடர் பதிப்பகம், விலைரூ.300. ஐம்பெருங் காப்பியங்களில் காணக் கிடக்கும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அழகுபடக் கூறியுள்ள நுால். தமிழரின் சமுதாயக் கட்டமைப்பு, அரசியல் நிர்வாகம், நீதி நெறிகள், குடும்ப உறவுகள், விளையாட்டுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், கலைகள், விழுமியங்கள் மேற்கோள் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டு உள்ளன. குடிமக்கள் ஆறில் ஒரு பங்கு அரசுக்கு வரி செலுத்தியதை சீவகசிந்தாமணி கூறுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது வரி வேண்டாமென, திறை விலக்கு அளித்து உள்ளான். கோவில் […]

Read more

பாறுக் கழுகுகளைத் தேடி

பாறுக் கழுகுகளைத் தேடி, சு.பாரதிதாசன், கலம்க்ரியா, விலை குறிப்பிடப்படவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குள் உலகில் கிட்டத்தட்ட மறைந்துவிட்ட கழுகு இனம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் உயிரினத்தை மீட்டு காக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்தியா முழுதும் பரவலாக காணப்பட்ட பாறு என்ற கழுகு இனம் தற்போது அருகிவிட்டது. அதை காக்கும் பணியில் கண்ட அனுபவத்துடன் கழுகு இனம் பற்றிய அரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நுால் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியில் உள்ளது. மொத்தம் […]

Read more

தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள்

தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள், யதி, தமிழில்: யூமா வாசுகி, தன்னறம் வெளியீடு, மொத்த விலை: ரூ.620. 1998-ல் ‘காலச்சுவடு’ இதழில் ‘மந்திரம், இசை, மௌனம்’ என்ற தலைப்புடன் ஜெயமோகன் எடுத்திருந்த நேர்காணல், நித்ய சைதன்ய யதி (1924 – 1999) என்ற பெயரைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தத்துவம், கலை, இலக்கியம், ஆன்மிகம் எனப் பல தளங்களில் அமைந்த செறிவான அந்த உரையாடல், நித்ய சைதன்ய யதியின் ஆளுமையை உணரச்செய்தது. அதன் பிறகு, செப்டம்பர் 1999-ல் வெளியான ‘சொல் புதிது’ […]

Read more

பிஞ்சு மலர்கள்

பிஞ்சு மலர்கள், சி. வீராகு, சத்யா பதிப்பகம், விலை 120ரூ. இந்த நூலில் கதை வடிவில் 40 கட்டுரைகள் இடம்பெற்று இருக்கின்றன. அவை அனைத்தும் சிறுவர்கள் ஆர்வத்துடன் படிக்கும்வகையில் உள்ளன. அந்தக் கட்டுரைகள் சொல்லும் நீதி என்ன என்பது விளக்கப்பட்டு இருப்பதோடு, பொது அறிவுத் தகவல்களும் தந்து இருப்பதால் சிறுவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 12/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்வே ஒரு மந்திரம்

வாழ்வே ஒரு மந்திரம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.280, விலை ரூ.260. ஒரு நூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால் அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை யாராவது கொடுத்தால் பருகத் தயார் என்ற நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் உள்ளனர். அத்தகையோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள தகவல் திரட்டுதான், இந்த நூல். திருமந்திர கருத்துகளை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.  எட்டு தலைப்புகளில் ஏராளமான […]

Read more

தியாகம் விளைந்த செம்புலம்

தியாகம் விளைந்த செம்புலம், பொன்முடி. சி.சுப்பையன், விஜயா பதிப்பகம், பக். 320, விலை ரூ.250. கோவைக்கு கிழக்கே இருபது கல் தொலைவில் நெடுஞ்சாலைகளின் தீண்டல் எதற்கும் சிக்காமல், உள் ஒதுங்கியிருக்கும் ஊர் அது. அங்கு பழமையும், புதுமையும் கலந்த ஒரு பண்பாடு உயிர்த் துடிப்போடு இன்றும் இருக்கிறது. கம்பும், நெல்லும், தானியங்களும் மட்டுமல்லாது, உழைப்பும் விளைந்த பூமி கண்ணம்பாளையம் என்பதை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிய முடிகிறது. பெரியவர்கள் பலரும் தந்த தகவல்களோடு ஊரில் தனது அனுபவங்களையும் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.  ஊரின் வரலாற்றை காலவரையறையோடு […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், பக். 352, விலை ரூ. 500. திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக, திமுக தலைவராக, மாநில முதல்வராக, திரைத்துறையில் சிறந்த வசனகர்த்தாவாக அறியப்படும் மு.கருணாநிதி, ஒரு மனிதராக எதிர்கொண்ட சவால்களையும், ஓயாத உழைப்பையும் பல்வேறு கட்டுரைகள், பேட்டிகள் மூலம் இந்நூல் விளக்குகிறது . சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக புரட்சி பேசி, தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றிய “பராசக்தி’ படம் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றாலும், 1952-ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் முன்னர் சந்தித்த பிரச்னைகள், […]

Read more
1 3 4 5 6 7 88