எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை
எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை, எம்.பொன்னுசாமி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.110.
உளவியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் அமைந்தவை. ஆசிரியரின் பணி ஓய்வுக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வார்த்தைத் தோரணங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
அவற்றில், ‘மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது எளிதான செயல் அல்ல. காரணம், மனதில் ஆசைகள், விருப்பங்கள், நோக்கங்கள் பல உள்ளன. மனதைக்கட்டுப்படுத்த, உலகியல் சார்ந்த ஆசைகளை நீக்கிவிடல் முதல்படி’ என எழுதியுள்ளார்.
தன்னம்பிக்கைக் கருத்துகள் முழுதும் விரவிக் கிடக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ள வழிகாட்டி நுால்.
– வி.விஷ்வா
நன்றி: தினமலர், 13/3/22
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818