கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், பக். 352, விலை ரூ. 500. திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக, திமுக தலைவராக, மாநில முதல்வராக, திரைத்துறையில் சிறந்த வசனகர்த்தாவாக அறியப்படும் மு.கருணாநிதி, ஒரு மனிதராக எதிர்கொண்ட சவால்களையும், ஓயாத உழைப்பையும் பல்வேறு கட்டுரைகள், பேட்டிகள் மூலம் இந்நூல் விளக்குகிறது . சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக புரட்சி பேசி, தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றிய “பராசக்தி’ படம் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றாலும், 1952-ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் முன்னர் சந்தித்த பிரச்னைகள், […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம் வெளியீடு, விலை: ரூ.500. கருணாநிதி ஆட்சியில் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் பத்திரிகை யாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. அவருடைய பதின்பருவத்து வாழ்க்கை, பத்திரிகையாளராகத் தொடங்கியதன் காரணமாக அவருக்கு எப்போதும் பத்திரிகையாளர்கள்மீது இணக்கமான பார்வை உண்டு. பத்திரிகையாளர்கள் கேட்கிற முரண்பாடான கேள்விகளுக்கும் லாகவமாகப் பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர் அவர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிற பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள், அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்விகளை எழுப்பி […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், விலைரூ.500. எழுத்து, நடிப்பு, ஆட்சி, கட்சியை வழிநடத்துதல் என பன்முகத் திறன்களால் மிளிர்ந்து வரலாற்றில் நிலைத்தவர் கருணாநிதி. ஆளுமை நிறைந்த மனிதர். உயர்த்தும் பண்புகளை, அவர் வளர்த்து கொண்ட விதம் பற்றி சித்தரிக்கும் நுால். வண்ணப் படங்களுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பிலும், கட்சியிலும் சந்தித்த நெருக்கடிகளை சமாளித்த காலங்களில் இதழ்களுக்கு அளித்த பேட்டிகள், முக்கிய பிரமுகர்களுடனான உரையாடல், சந்திப்புகளில் சொன்ன தகவல்கள், எழுதிய பத்திகள் மற்றும் கட்டுரைகளால் நிரம்பியுள்ளது. இந்த நுாலை ஆக்கியிருப்பவர் மணா; […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை, விலை: ரூ.300. ஒரு பத்திரிகையாளராகத் தமிழகம் முழுக்க மேற்கொண்ட பயணங்களின் வழியே கிடைத்த கள யதார்த்தங்களைக் கட்டுரையாக்கியிருக்கிறார் மணா. ஏற்கெனவே 40 கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு இது. ‘சாம்பல் நத்தம்’ தொடங்கி ‘கீழடி’ வரை என 75 இடங்களின் தொகுப்பாகப் பதிவாகியிருக்கும் இந்தக் கட்டுரைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 08.02.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000000330_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை வெளியீடு, விலை 300ரூ. தமிழகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஏராளமான நினைவுச் சின்னங்களில், பல முறை சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களைத் தவிர்த்து, பலரும் சற்றேறக்குறைய மறந்துவிட்ட – சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சம்பவங்களை இந்த நூல் நினைவுபடுத்தி இருக்கிறது. தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் இருக்கிறது என்பது போன்ற வியப்பான தகவல்கள் இதில் காணக்கிடக்கின்றன. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷின் கல்லறை, ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய பின்னர் ஆங்கிலேயர்களால் […]

Read more

நினைவின் நிழல்கள்

நினைவின் நிழல்கள், மணா, கலைஞன் பதிப்பகம், விலை 195ரூ. இந்திய சிற்பங்களுக்கு ஒழுங்கு முறை மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு திறந்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதுவே ஓர் அறிஞராக இருப்பின் நமக்கு இன்னும் கூடுதல் தகவல்களும், செய்திகளும் கிடைக்கும். அந்த அறிஞர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நூலாக்கிப் படித்தால் தீங்கனியாக இனிக்கும்தானே! அப்படியான ஒரு புத்தகம் தான், ‘நினைவின் நிழல்கள்.’ பல்வேறு துறை சார்ந்த சாதனை மனிதர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம், அனுபவங்கள், தான் பேட்டி […]

Read more