தமிழகத் தடங்கள்
தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை வெளியீடு, விலை 300ரூ.
தமிழகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஏராளமான நினைவுச் சின்னங்களில், பல முறை சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களைத் தவிர்த்து, பலரும் சற்றேறக்குறைய மறந்துவிட்ட – சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சம்பவங்களை இந்த நூல் நினைவுபடுத்தி இருக்கிறது.
தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் இருக்கிறது என்பது போன்ற வியப்பான தகவல்கள் இதில் காணக்கிடக்கின்றன. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷின் கல்லறை, ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய பின்னர் ஆங்கிலேயர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட மருதநாயகம் கான்சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட தர்ஹா, வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் பணியாற்றி, இந்தியாவின் முதல் வெடிகுண்டு என்று போற்றப்படும் சுந்தலிங்கமும் அவரது மனைவியும் குதித்து தகர்த்த வெடிமருந்துக் கிடங்கு போன்ற பல சின்னங்களை இந்த நூல் நினைவுபடுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உண்ணாவிரம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்த இடத்தில் எந்தவிதமான அடையாளமூம் இல்லை என்பது போன்ற வேதனையையும் வெளிப்படுத்தி இருக்கும் ஆசிரியர், அனைவரும் நினைவில் வைத்து இருக்க வேண்டிய 75 இடங்களின் வரலாற்றை சுவைபடத் தந்து இருப்பது எல்லா தரப்பினரையும் கவரும்.
நன்றி: தினத்தந்தி,19-2-20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000000330.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818