அறுபத்து மூன்று நாயன்மார்கள்
அறுபத்து மூன்று நாயன்மார்கள், ம.அரங்கராசன், மணிவாசகர் பதிப்பகம், விலை 175ரூ.
அநபாய சோழன் என்ற மன்னரிடம் முதல் அமைச்சராகப் பணியாற்றிய சேக்கிழார், சைவ சமயம் செழித்தோங்குவதற்காக இயற்றிய பெரிய புராணப் பாடல்களை அனைவரும் படித்து அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரை நடையில் இந்த நூலை ஆசிரியர் ஆக்கி இருக்கிறார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் குறித்தும் கூறப்படும் வரலாற்றுத் தகவல்கள் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் அதே சமயம் அவர்கள் குறித்து சேக்கிழார் எழுதிய முக்கிய பாடல்களையும் அவற்றுக்கான விளக்க உரையையும் கொடுத்து இருப்பதால் அனைத்து நாயன்மார்கள் பற்றியும் ஆழ்ந்து படித்து அறிந்துகொள்ள முடிகிறது.
நன்றி: தினத்தந்தி,19-2-20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818