மனிதகுலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு

மனிதகுலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு, ருட்கர் பிரெக்மன், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், விலைரூ.599. மனித குலம் நம்பிக்கையுடன் பயணிக்கிறதா, அவநம்பிக்கையுடன் நகர்கிறதா என்ற மதிப்பீட்டை முன்வைத்து எழுதப்பட்டுள்ள முக்கிய நுால். தொல்லியல், மரபியல், மானுடவியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகளை மையப்படுத்தி உள்ளது. உலகில் நெருக்கடியான காலங்களில் நடந்த முக்கிய சம்பவங்களை மறு விசாரணை செய்கிறது. சுயநலத்துக்கு மனிதன் முன்னுரிமை கொடுக்கிறான் என, காலங்காலமாக நிலவும் கருத்து மீது கேள்வி எழுப்புகிறது. நெருக்கடிகளின் போது மிக இயல்பாக செயல்பட்டுள்ளது மனித இனம் என்பதை பல்வேறு ஆய்வுகளை […]

Read more

தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும்

தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும், வி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170. பண்டைய இலக்கிய பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த கட்டுரைகளை கொண்டுள்ள நுால். முதல் பகுதியில் தமிழர் பண்பாடு, தமிழ் மொழி சிறப்பைக் கூறும் கட்டுரைகளும், இலக்கியங்களில் காணப்படும் அறக்கருத்து அறிவுரைக் கட்டுரைகளும் உள்ளன. இரண்டாம் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்புகளையும் தொன்றுதொட்டு வரும் தமிழர் பழக்க வழக்கங்கள், கோட்பாடுகள், அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் கூறுகள், நம்பிக்கைகள், நாகரிக மாற்றங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது.திருக்குறள் முப்பாலில் உள்ள தேர்ந்தெடுத்த 75 குறள்களுக்கு விளக்கமும், […]

Read more

உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும்

உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும், கே.எம்.சங்கரநாராயணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.60. அத்தியாவசிய தேவையான உணவு, உடை, வசிப்பிடம் பற்றிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வெந்த மாமிசத்தை தின்னும் பழக்கம் சீனாவில் தோன்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது. உடையில் முதலில் தோன்றியது கவுபீனம். அது தோன்றியது பற்றியும், நாகரிக உடை வளர்ச்சியில் அதன் இடம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அதை அணியும் பழக்கம் சிலரிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வசிப்பிடத்தில் குடிசை, மண் வீடு, கல் வீடு என்று, அடுக்குமாடியாக வளர்ச்சி கண்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். மின்வசதிக்கு […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் – 10

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் – 10, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.310. யந்திர தகடுகளை வைத்துக் கொள்ளும் வழக்கமானது, மூடத் தனமான எதிர்பார்ப்புடன், சுய முன்னேற்ற முயற்சிகளை முடக்கும்; சோம்பேறித்தனத்தை வளர்க்கும்; விபரீத விளைவுகளுக்கு இடம் கொடுக்கும்; விஷப்பரிட்சைக்கு ஆளாக்கும். யந்திர தகடுகளை வைத்து, அவற்றின் மூலம் என்ன பெறலாம் என்று எதிர்பார்ப்பதை விட, ஆக்கப்பூர்வமான தொழில் துறை இயந்திரங்களை உரிய முறையில் பயன்படுத்தி, நாமே ஒரு உன்னத இயந்திரமாக மாறி உழைப்பதே உயர்ந்தது! பல லட்சம் வாசகர்கள் […]

Read more

தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!

தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!, எஸ்.எல்.நாணு, குவிகம் பதிப்பகம், விலைரூ.170. எழுத்து, நடிப்பு என்ற கலைகளிலும் திறன் பெற்ற அனுபவங்களை பதிவு செய்துள்ளார். எழுதத் துவங்கிய தருணம், கிடைத்த அங்கீகாரம், வாய்த்த அறிமுகம், கிட்டிய வாய்ப்புகள் என, 40 ஆண்டு கால நிகழ்வுகளை உரையாடல் போல் சொல்லி உள்ளார். எழுத்தாளர் சாவி, நடிகர் நாகேஷ், இயக்குனர் பாரதிராஜா போன்றோரை சந்திக்க முடிந்தும், நெருக்கம் ஏற்படுத்த முடியாமல் போனது குறித்தும் விவரித்துள்ளார். கொல்கத்தா மற்றும் சென்னை நகரின் அமைப்பு, அப்போதைய பிரபல பகுதிகள் தொடர்பான […]

Read more

டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை

டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை, எஸ்.ராமதுரை, தமிழில் – கி.இராமன், கிழக்கு பதிப்பகம், பக். 456, விலை ரூ.550. டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியோடு தனது வாழ்க்கையை நகர்த்தியவரும், அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவருமான ராமதுரையால் எழுதப்பட்டது இந்நூல். தன்னம்பிக்கை பேச்சாளர்கள் நூறு மணி நேரம் பேசினாலும்கூட கிடைக்காத உத்வேகத்தை தனித்து நின்று ஜெயித்துக் காட்டிய ஒருவரது கதை தந்துவிடும் என்பதை உணர்த்தும் நூல் இது. டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம், அருகம்புல் அளவில் தொடங்கியது முதல் ஆலமரமாக கிளை பரப்பியது வரை […]

Read more

அப்துற்-றஹீம் ஆய்வுச் சரம்

அப்துற்-றஹீம் ஆய்வுச் சரம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 512, விலை ரூ. 450. இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், நபிமார்கள் வரலாறு, வலிமார்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதிய எம்.ஆர்.எம். அப்துற்-றஹீமின் படைப்புகள் தொடர்பாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட 45 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அப்துற் றஹீம் தனது நூல்களில் பதிவு செய்துள்ளபடி, ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள், மாற்றங்களை ஆய்வு செய்யும் ‘மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்’ என்ற கட்டுரை லிங்கனின் வாழ்க்கை வரலாற்றையே முழுமையாக விவரிக்கிறது. அப்துற் றஹீம் […]

Read more

அறியப்படாத தமிழகம்

அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.100. சாதாரண நடைமுறையில் இருந்தாலும், தாம் அதிகம் பொருட்படுத்தாத பல விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதன் பழங்கால வரலாறு, பண்பாடு என்ன என்பவை இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கப்பட்டு இருக்கின்றன. உப்பு, எண்ணெய், அறியப்படாத தேங்காய் வழிபாடு, உரல்-உலக்கை, விநாயகர் வழிபாடு, பல்லாங்குழி போன்ற பலவற்றின் வேர்களை ஆராய்ந்து படைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் வியப்பை அளிப்பவையாக உள்ளன. பிறப்பு இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே விழா பொங்கல் பண்டிகை என்ற தகவலும் தரப்பட்டு இருக்கிறது. மதுரையில் வாழ்ந்த […]

Read more

அறவாணரின் கீழ்க்கணக்கு உரை  சிறப்பியல்புகள்

அறவாணரின் கீழ்க்கணக்கு உரை  சிறப்பியல்புகள், இனம் பதிப்பகம்,  பக் 208, விலை  ரூ.200,  பதினெண்கீழ்க்கணக்கு க.ப.அறவாணன் எழுதிய உரைத்திறம் எத்தகையது என்பதை அறிவதற்தென்றே ஓர் ஆய்வரங்கத்தை நடத்தி, கட்டுரை உருவாக்கத்துக்கான நெறிமுறைகளைப் பேராளர்களுக்கு அனுப்பி, அறவாணரின் உரை சிறப்பியல்புகள் பெறப்பட்டன என்று இந்நூல் உருவான விவரத்தை முன்னுரை தெளிவாக்குகிறது.  அந்த வகையில், க.ப.அறவாணன் உரை நூல்களில் கையாண்டுள்ள சொல், தொடருக்கான பொருள் பொருத்தப்பாட்டை உரிய சான்றுகளுடன் சுட்டிக் காட்டுவது; ஒவ்வொரு பாடலுக்கும் அவர் கொடுத்துள்ள தலைப்பின் பொருத்தத்தை விளக்குவது, கட்டமைப்பு நோக்கில் அவரது மொழியாளுமைகளை […]

Read more

நெசவு மொழி

நெசவு மொழி, முனைவர் சு.கார்த்திகேயன், காவ்யா, பக்.261, விலை ரூ.260. உலகில் பண்டையக் கலைகளுள் ஒன்று நெசவுக் கலை. தொன்மையான இந்த நெசவுத் தொழிலில் காலச் சுழற்சி, மனிதப் பயன்பாடு ஆகியவற்றுக்கேற்ப ஏற்பட்ட பல பரிணாமங்களையும், இந்தத் தொழிலின் பயன்படுத்தப்பட்ட தொன்மையான சொற்கள் பல அழிந்தும், சில நிலைபேறு அடைந்தும், பல புதிய சொல்லாகத் திரிந்தும், பிறமொழிச் சொற்களுடன் கலந்தும் உள்ள நிலையையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.  குறிப்பாக ‘கோபி’ வட்டத்தை ஆய்வு எல்லையாகக் கொண்டுள்ள இந்த நூலில் கைத்தறி, விசைத்தறி என இரு […]

Read more
1 2 3 4 88