அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.100.
சாதாரண நடைமுறையில் இருந்தாலும், தாம் அதிகம் பொருட்படுத்தாத பல விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதன் பழங்கால வரலாறு, பண்பாடு என்ன என்பவை இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கப்பட்டு இருக்கின்றன.
உப்பு, எண்ணெய், அறியப்படாத தேங்காய் வழிபாடு, உரல்-உலக்கை, விநாயகர் வழிபாடு, பல்லாங்குழி போன்ற பலவற்றின் வேர்களை ஆராய்ந்து படைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் வியப்பை அளிப்பவையாக உள்ளன. பிறப்பு இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே விழா பொங்கல் பண்டிகை என்ற தகவலும் தரப்பட்டு இருக்கிறது. மதுரையில் வாழ்ந்த ஆங்கிலேயப் பாண்டியன் என்பவரின் வரலாற்றில் அதிசயமான செய்திகள் அடங்கி இருக்கின்றன. தமிழகத்தின் பழமை, இந்த நூல் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது எனலாம்.
நன்றி: தினத்தந்தி, 17/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818