தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!
தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!, எஸ்.எல்.நாணு, குவிகம் பதிப்பகம், விலைரூ.170.
எழுத்து, நடிப்பு என்ற கலைகளிலும் திறன் பெற்ற அனுபவங்களை பதிவு செய்துள்ளார். எழுதத் துவங்கிய தருணம், கிடைத்த அங்கீகாரம், வாய்த்த அறிமுகம், கிட்டிய வாய்ப்புகள் என, 40 ஆண்டு கால நிகழ்வுகளை உரையாடல் போல் சொல்லி உள்ளார்.
எழுத்தாளர் சாவி, நடிகர் நாகேஷ், இயக்குனர் பாரதிராஜா போன்றோரை சந்திக்க முடிந்தும், நெருக்கம் ஏற்படுத்த முடியாமல் போனது குறித்தும் விவரித்துள்ளார்.
கொல்கத்தா மற்றும் சென்னை நகரின் அமைப்பு, அப்போதைய பிரபல பகுதிகள் தொடர்பான தகவல்களையும், பணியாற்றிய நாடகக் கலைஞர்கள் குறித்தும் புகைப்படங்கேளாடு பதிவு செய்துள்ளார். அனுபவங்களை அள்ளித் தரும் மந்திரப் பாத்திரம் இந்த புத்தகம்.
– பெருந்துறையான்
நன்றி: தினமலர், 10/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818