ஜீவன் லீலா
ஜீவன் லீலா, குஜராத்தியில் – காகா காலேல்கர், தமிழில் – பி.எம்.கிருஷ்ணசாமி, பக்.480, விலை ரூ.385.
குஜராத்தியில் “லோகமாதா’ எனும் பெயரில் வெளியான நூலின் தமிழாக்கமே “ஜீவன் லீலா’. இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக காணப்படும் அருவி, ஆறு, ஏரி இவற்றோடு சேர்ந்த கடல், கடல்-ஆறு சங்கமம், கடற்கரை குறித்து 70 தலைப்புகளில் நூலாசிரியர் இந்நூலில் விவரித்துள்ளார். ஒவ்வொரு தலைப்பிலும் தனது பயண அனுபவங்களோடு அதன் பின்புலமாக உள்ள புராண – இதிகாச குறிப்புகள், வரலாறு, அங்கு வாழும் மக்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இதை தேசபக்தியைத் தெரிவிக்கும் மிக்க மகிழ்ச்சி தரக்கூடிய முறையாக அவர் கருதுகிறார்.
அடையாறு, கூவம் ஆறுகளை ‘இரு சென்னைச் சகோதரிகள்’ எனக் குறிப்பிடும் நூலாசிரியர், சென்னை நகரம் இவ்வாறுகளின் பெருமையை அதிகப்படுத்தியது போலவே அலட்சியப்படுத்தியும் உள்ளது என்று குறிப்பிடுகிறார்.
எந்த இயற்கைக் காட்சி பற்றியும் மிக அரிதாகவே வர்ணிக்கும் காந்தியடிகள், கன்னியாகுமரியின் பெருமைகள் குறித்து நூலாசிரியரிடம் மிகவும் உற்சாகமாக வர்ணித்துள்ளார். இது தமிழகத்தை பெருமைப்படுத்துவதாக உள்ளது.
பயணங்களில் ஆர்வமுள்ளோருக்கும், இந்திய நீர்நிலைகள் குறித்து பரந்த கண்ணோட்டம் ஏற்படுவதற்கும் இந்நூல் பெரிதும் வழிகாட்டியாய் அமையும்.
நன்றி: தினமணி, 11/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031991_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818