அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும்
அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும், வி.என்.ராகவன், அலைகள் வெளியீட்டகம், விலை:ரூ. 110.
அமெரிக்காவில், கறுப்பினத்தவரின் அடிமை வாழ்வுக்கு எதிரான அடிமை முறை ஒழிப்பும் குறித்த முதல் தமிழ் நூலாக இது காணப்படு கிறது. இளமைப் பருவத்தின்போதும், அரசியலில் ஆபிரகாம் லிங்கனும் ஈடுபட்டபோதும் ஆபிரகாம் லிங்கன் எதிர் கொண்ட சவால்கள், அவற்றை மன உறுதியுடன் சந்தித்து அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தது எவ்வாறு என்பது விளக்கமாகத் தரப்பட்டு இருக்கிறது.
அவர் பதவி ஏற்றதும் நடைபெற்ற உள்நாட்டுப் போர், 1862-ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டு வெளியான பிரகடனம், 1865 ஏப்ரல் 14-ந் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகிய வரலாற்று சம்பவங்களும் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 13/2/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818