வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன், மு.கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.140.
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்றும், கொள்ளைக்காரர் என்றும் இருவிதமாக அடையாளப்படுத்தப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்னின் உண்மையான வரலாறு என்ன என்பது இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.
கட்டபொம்மன் தொடர்பான இரண்டு கருத்துகளையும் எடுத்துக்கூறி, உண்மை என்ன என்ற தேடலில் இந்த நூல் ஈடுபட்டு இருப்பதை நன்கு உணரமுடிகிறது. ராமநாதபுரம் அரண்ம னையில் கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சந்தித்தபோது நடந்தது என்ன? அங்கு இருந்து கட்டபொம்மன் தப்பியது எப்படி? என்பவை விவரமாகத் தரப்பட்டு இருக்கின்றன.
கட்டபொம்மனை தூக்கிலிட்ட பிறகு, அனைத்து பாளையங்களையும் ஒழிக்கும் விதமாக ஆங்கிலேயர்கள் எடுத்த அடாவடி நடவடிக்கையையும் இந்த நூல் பதிவு செய்து இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 13/2/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9789390958115/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818